tamilnadu

img

ஏழைகளுக்கு கிள்ளித் தரும் பாஜக அரசு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஏழைகளுக்கு கிள்ளித் தரும் பாஜக அரசு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, செப். 11- மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி கார்ப்ப ரேட் மோசடியாளர்களுக்கு அள்ளி வழங்கும் மோடி அரசு, கிராமப்புற ஏழைகளின் ஊரக வேலை திட்டத்திற்கு கிள்ளி கொடுப்பதை கண்டித்து சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை (செப்.11) மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தின்படி வேலைக்கான அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வேலை இல்லாத நாட்களில் காலப்படியை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். கிராமப்புற ஊரக வேலை திட்டத்திற்கு ரூ.2.50 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், தினக்கூலியை ரூ. 600 ஆகவும் வேலை நாட்களை 200 நாட்களாகவும் உயர்த்தி கொடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சங்கத்தின் வட்டச் செயலாளர் பி.பழனி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி, செய லாளர் பி.சுப்பிரமணியன், சிபிஎம் வட்டச் செய லாளர் டி.மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  ஆர்.பாபு,  கே.மூக்கன், எல்.ராமசாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.