tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

ஈரோடு, ஆக. 24- மாற்றுத்திறனாளிகள் சங்க பவானிசாகர் - புளியம்பட்டி வட்டார மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட் டம், பவானிசாகர் - புளியம்பட்டி வட்டார கமிட்டியின் 2 ஆவது  மாநாடு, பவானிசாகர் பேரூராட்சி மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. சங்கத்தின் கொடியினை சண்முகம் ஏற்றி வைத்தார். வட்டார தலைவர் டி.சுப்பிரமணி தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து துவக்கவுரை யாற்றினார். செயலாளர் நடராசன், பொருளாளர் ஆர்.ரமேஷ்  ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாவட்டப் பொரு ளாளர் வி.ராஜூ உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி செப்.2  ஆம் தேதி பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டாரத் தலைவ ராக ஆர்.நடராசன், செயலாளராக ஆர்.ரமேஷ், பொருளாள ராக மயில்சாமி உட்பட 21 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய் யப்பட்டது. மாநில துணைச்செயலாளர் ராஜேஷ் நிறைவுரை யாற்றினார்.