tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நடிகவேள் எம்.ஆர்.ராதா மனைவியின் உடல் தகனம்

சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி யும், நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷாவின் தாயாருமான  கீதா ராதா உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை கால மானார். அவருக்கு வயது 86. தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடம் படைத்தவர் மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா. கருப்பு, வெள்ளை திரைப்பட  காலத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்தவர். இவரது மனைவி கீதா ராதா. இவர்களது மகள்கள் ராதிகா மற்றும் நிரோஷா. எம்.ஆர்.ராதாவின் மறைவுக்குப் பிறகு கீதா  ராதாவை, இரு மகள்களும் கவனித்து வந்தனர். இந்நிலை யில், சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கீதா  ராதா காலமானார். மறைந்த கீதா ராதாவின் உடல் அஞ்சலிக்காக போய்ஸ்  கார்டன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழிலன் எம்எல்ஏ உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று கீதா ராதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் பிரபு,  பாக்யராஜ், சிவக்குமார், நாசர் உள்ளிட்டோரும் நேரில்  சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், கீதா ராதாவின் உடல்  பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஆவின் நெய் விலை குறைப்பு; ஆனால் தள்ளுபடி ரத்து

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் விலை திங்கள் கிழமை குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனமும் பால் பொருள்களின் விலையைக் குறைத்து புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு  லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 700-இல் இருந்து ரூ.  660 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பன்னீர் விலை (500 கிராம்) ரூ. 300-இல் இருந்து ரூ. 275 ஆகவும்,  பதப்படுத்தப்பட்ட பால் (யுஎச்டி பால்) 150 மிலி ரூ.12-இல் இருந்து ரூ. 10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பின்படி, 5 லிட்டர் பாட்டில் நெய்யின்  விலை ரூ.3,600-இல் இருந்து ரூ. 3,250 ஆக குறைக்கப் பட்ட நிலையில், இந்த வகை பொருளுக்கு ஆவின் அளித்து  வந்த ரூ. 50 தள்ளுபடியை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், முன்பு அளிக்கப்பட்ட தள்ளுபடியை  சேர்த்து தற்போது 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ.3,300 -க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 15 லிட்டர் நெய் டின்னுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.  175 தள்ளுபடியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறு வனம், அடுத்தடுத்து வெண்ணெய், ஐஸ்கிரீம், லஸ்ஸி, மில்க்  ஷேக் போன்ற பிற பொருள்களின் விலையையும் குறைத்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4.07 லட்சம் மாணவர்கள்  புதிய சேர்க்கை சிவகங்கை: இந்த ஆண்டு

மாநில அரசு பள்ளிகளில் 4,07,379 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி தெரி வித்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு8,388 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; மேலும் 3,277 பேர் விரை வில் நியமிக்கப்பட உள்ள னர். மும்மொழிக் கொள் கையை தமிழக அரசு ஏற்காது என்றும், கட்டிடம் சீர்கேட்டில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பிளாக் லிஸ்ட் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரி வித்தார்.

இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமார் ஆகியோர் இடையே  அண்மையில் கருத்து  மோதல்கள் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு  திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம்  இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்ப தால், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்து களை தெரிவிக்க சீமா னுக்கு தடை விதிக்கக் கோரி, வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சீமான்  தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்படாத தால், வழக்கை அக்.15 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதி, தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.