tamilnadu

img

தேசிய திறனறி தேர்வில் சாதனை! தூய மரியன்னை பள்ளி மாணவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பாராட்டு

தேசிய திறனறி தேர்வில் சாதனை! தூய மரியன்னை பள்ளி மாணவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பாராட்டு

மதுரை, ஜூலை 15- காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளில் தேசிய திறனாய்வு தேர்வில் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் சு. வெங்கடேசன் எம்பி கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேசிய திறனறிவு தேர்வு (என்.எம். எம். எஸ்) 2025 இல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாயன்று தூய மரியன்னை கலைமகள் அதிபர் அருள்பணி வி. ஹென்றி ஜெரோம், இயேசு சபை மதுரை மறை மாநில கல்விகள் அமைப்பகம்  ஒருங்கிணைப்பாளர் அருட்பணி ச. மி. ஜான் கென்னடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருள் சகோதரர் குழந்தை ராஜ், தலைமை ஆசிரியர் அருட்பணி சைமன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் பள்ளியின் முன்னாள் மாணவர் நா. ஜெகதீசன் ஆகியோர் வாழ்த்திப் பேசி மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு பகுதிக் குழு செயலாளர் ஜெ. லெனின், அ. போனிபேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர் ஜெரோம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.