tamilnadu

img

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுக! பவர் இன்ஜினீயர்ஸ் அமைப்பின் மாநில மாநாடு கோரிக்கை

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுக! பவர் இன்ஜினீயர்ஸ் அமைப்பின் மாநில மாநாடு கோரிக்கை

பவர் இன்ஜினீயர்ஸ் அமைப்பின் மாநில மாநாடு கோரிக்கை

தூத்துக்குடி, அக்.12- மின்சார சட்டத் திருத்த மசோதாவை  கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு பவர் இன்ஜினீயர்ஸ் அமைப்பின் மாநில  மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பவர் இன்ஜினீயர்ஸ் அமைப்பின் 7 ஆவது மாநில மாநாடு  அக்.12 (ஞாயிறு) அன்று தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகரில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஆர்.  குருவேல் தலைமை வகித்தார். மாநில உதவித் தலைவர் ரவிச்சந்திரன் சங்கக்  கொடியினை ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் ஆர்.ரசல் வர வேற்புரையாற்றினார். மாநிலச் செய லாளர் ஆனந்தம் அஞ்சலி தீர்மானத்தை  வாசித்தார். சிஐடியு மாநிலச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்து  உரையாற்றினார். வேலை - ஸ்தாபன அறிக்கையை சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அருள் செல்வன், வரவு - செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஆதன் இளஞ்சிரண் ஆகியோர் சமர்ப்பித்தனர்.   மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர்கள் எஸ்.கண்ணன்,  வண்ணமுத்து, மாநில துணைப் பொதுச் செயலாளர் பீர் முகமது ஷா  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மத்திய  அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில், மாநிலத் தலைவராக எஸ்.அப்பாதுரை, பொதுச் செயலாள ராக அருள்செல்வன், பொருளாளராக அறிவழகன், அமைப்புச் செயலாளராக  ஆனந்தம் உட்பட 32 பேர் கொண்ட  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர்.  1.12.2023 முதல் மின்வாரிய பணியா ளர்களுக்கு ஊதிய உயர்வை அளித்திட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். 63 ஆயிரம்  காலிப் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப வேண்டும்.  மின் நுகர்வோர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.