தமிழ்நாடு தகவல் ஆணையராக அ. விஜயராம் பதவியேற்றார்!
சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்துக்கு புதிய ஆணையராக அ. விஜயராம் பதவியேற்றுக் கொண்டார். அவ ருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைமைத் தகவல் ஆணையர் ஷகீல் அக்தர், மனிதவள மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலர் சமயமூர்த்தி, ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகாரை விசாரிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு தகவல் ஆணையர்களுடன் அமைக்கப்பட்ட இவ்வாணையத்தில், பின்னர் ஆணையர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப் பட்டது. தற்போது மேலும் இரண்டு புதிய பதவிகளை அரசு உருவாக்கியுள்ளது. உளவுத்துறை
