tamilnadu

img

கொடியுரிமை காக்க இடைவிடாத போராட்டம்

கொடியுரிமை காக்க இடைவிடாத போராட்டம்

வணக்கம் தோழர்களே! கொடிக்கம்பங்களை நடு வதற்கும், கொடியேற்று வதற்கும் நமது மூதாதையர்கள் பட்ட எண்ண ற்ற கஷ்டங்களைப் போலவே, இப்போது அக்கொடிக்கம்பங்களை காப்பாற்றுவதற்கு நாம் கடுமையான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது.  நிலப்பிரபுக்களால் அடிமைப்படுத்தப் பட்டிருந்த பண்ணை யடிமைகள், பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்கள் தாங்கள் விரும்பிய அமைப்பில் சேரவும், அந்த அமைப்பின் கொடியை தங்கள் குடியிருப்பில் ஏற்றவும் கடும் எதிர்ப்பு இருந்தது. மீறி கொடி ஏற்றிய பல இடங்களில் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வாழை நடப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. கீழவெண்மணியில் செங்கொடியை இறக்கவும், நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் மஞ்சள் கொடியை ஏற்றவும்  ஒப்புக் கொண்டி ருந்தால் 44 உயிர்கள் எரிந்து சாம்பலாகாமல் கூடுதல் கூலியும் கிடைத்திருக்கும். ஆனால், மக்கள் தங்கள் விடுதலைக்கு காரணமாக இருந்த செங்கொடியை உயிரே போனாலும் இறக்க மாட்டோம் என்றே முடிவெடுத்தனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கொடி யேற்றுவதற்கு வனத்துறையினர் தடுத்து அதை மீறி கொடியேற்றியதற்காக பொய் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு.  அதிலும் ஆளும் வர்க்கத்திற்கு செங்கொடி என்றால் உடம்பெல்லாம் எரியும்; கண்கள் சிவக்கும்; மூக்கு விடைக்கும். பட்டொளி வீசிப் பறக்கும் கொடியை பார்த்து அதிகார வர்க்கம் வெகுண்டெழும். நியாயமற்ற உத்தரவு இன்றைக்கும் ஆதிக்கம் செலுத்த நினைப்போர் தங்கள் பகுதியில் புதிதாக கொடியேற்றுவதை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட மக்களின் உறுதியின் காரணமாகவே கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் அவரவர்களுக்கான கொடியை கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் சங்கம் சேரும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கி இருக்கிறது. ஆனால், தொழிலாளர்கள் தங்கள் சங்கக் கொடியை தொழிற்சாலை வாயிலில் ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படு கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொடி யுண்டு. ஆனால் அந்தக் கொடியை பொது இடங்களில் ஏற்றுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. நீண்ட காலத்திற்கு முன்பு, வரலாற்றுப் புகழ்மிக்க பல தலைவர்களாலும், தியாகிகள் நினைவாகவும் அமைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை அதன் வரலாறு தெரி யாமல் கண்மூடித்தனமாக, அனைத்து கொடி  கம்பங்களையும் குறிப்பிட்ட காலவரை யறைக்குள் அப்புறப்படுத்தியே தீர வேண்டு மென்று 27.01.2025 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டது நியாயமற்ற ஒன்று. அதைவிடக் கொடுமை தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.நிஷாபானு தலைமையிலான டிவிசன்பெஞ்ச், வழக்கை தள்ளுபடி செய்தது, அதைவிடக் கொடுமை. உயர்நீதிமன்றம் வழங்கிய எத்தனையோ தீர்ப்புகள் அமல்படுத்தப்படாமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. பல வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே தீர்ப்பை அதிகாரிகள் அமல்படுத்தியிருக்கின்றனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொடர்பான வழக்கில் இறுதியாக 2022 நவம்பர் மாதம் தீர்ப்பை வழங்கியது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அத்தீர்ப்பு அமல்  படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட நீதிபதி களும் ஏன் என்று கேட்கவில்லை. ஆனால், கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அதீத ஆர்வம் காட்டினர் என்பதை மறுக்க முடியாது. படை திரட்டி இடிக்கும் வேலை பொக்லைன் இயந்திரம், கடப்பாரை, சம்மட்டி என சகல ஆயுதங்களுடன் காவல்துறையினர் பாதுகாப்புடன் படை திரட்டி வந்து இடிக்கும் வேலையை மாநிலம் முழுவதும் ஏக காலத்தில் மேற்கொண்டனர். இதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மாநிலம் முழுவதும் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவும், நீதிப் பேராணை மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. அதுவரை கொடிக் கம்பங்களை அகற்றும் நட வடிக்கையை நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் நேரில் வலியுறுத்தினோம். தலையிடாத தலைமை நீதிபதி நாம் தொடுத்த வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றுமாறு தலைமை நீதி பதிக்கு பரிந்துரை செய்தது. அத்துடன், தனி  நீதிபதியின் உத்தரவு இயற்கை நீதிக்கு புறம்பா னது என்றும், கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு உத்தரவிடுவதற்கு முன்பு அவர் களின் கருத்துக்களை கேட்காதது தவறு என்றும் குறிப்பிட்டது. ஆனால், இதற்குப் பிறகும்  கொடிக் கம்பங்களை அகற்றும் மோசமான  செயல் தொடரவே செய்தது. உயர்நீதிமன்றத் தின் இந்த தீர்ப்பிற்கு மாறாக தனி நீதிபதி  ஜூலை 2 ஆம் தேதிக்குள் அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் குறிப்பிட்டார். இந்த நிலையிலும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடாதது துரதிர்ஷ்டவசமானது. தனி நீதிபதியின் உத்தரவை சிரமேற் கொண்டு அமல்படுத்தும் விதத்தில் ஜூலை 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஜூலை 18 ஆம் தேதிக்குள் 100 சதவிகிதம் கொடிக் கம்பங்களை அகற்றி அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று கடிதம் எழுதினார். இதை எதிர்த்து கட்சியின் சார்பில் மீண்டும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வியாழனன்று (17.07.2025) உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகஸ்ட் 18 வரை...  இதற்கிடையில் நமது வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், திருமூர்த்தி ஆகியோர் உயர்நீதிமன்ற பதிவாளர், தலைமை நீதிபதி ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தியதை தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதி இரவு நீதிபதி கள் எஸ்.எம்.சுப்பிரமணி, ஆர்.விஜயகுமார், எஸ்.சௌந்தர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு வழக்கை மாற்றி யுள்ளனர். இதனை குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கொடிக் கம்பங்களை அகற்று வதற்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், அது வரை அரசு அதிகாரிகள் எவ்வித தொந்தரவு களையும் செய்யக் கூடாது என்பதை அரசு வழக்கறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்  தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு நெடுகிலும் தனது முத்திரையை பதித்திருக் கிறது. கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதி ரான போராட்டமும் ஜனநாயகத்தை காப்ப தற்கான போராட்டத்தின் ஒரு பகுதிதான். இந்த விஷயத்தில் அரசும், அதிகார வர்க்கமும் நியாயமற்ற முறையில் நடந்து  கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். “சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் - அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து” என்பது குறள். இது நீதித்துறைக்கும் பொருந்தும்தானே.