tamilnadu

img

“உண்மையின் கண்ணாமூச்சி ஆட்டம்” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

திடீரென, யோசிப்பதற்குள் அந்த விபத்து நடந்து விடுகிறது. காரை நிறுத்தி, அடிபட்ட இளம் பெண்ணை காப்பாற்றாமல், பயத்தில் தப்பித்து ஓடுகிறாள் அந்த பெண் காரோட்டி (Hit and Run).  ஓரிரு நாட்களில், தவறிழைத்த அவளது மனசாட்சியோ, நடந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறது.  பின்னர் குற்ற உணர்வின் உந்துதலால் அவளது மனசாட்சி, உண்மையிடம் தஞ்சமடைகிறது.  இதனை, எதார்த்த நிகழ்வுகளோடு இணைத்து,மிகையின்றி பேசுகிற ஹிந்திபடமே “ஜல்ஸா!” (கொண்டாட்டம்) மாயா மேனன், டபிள்யுஆர்டி (WRD) என்ற செய்தி நிறுவன நெறியாளர். எச்  செயலையும் மனசாட்சியோடு நேர்த்தி யாக செய்பவள்.மகன் ஆயூஸ்,சிறப்பு வகை குழந்தை. கணவனை சட்டப்பூர்வ மாக பிரிந்து வாழ்பவள்.காரியவாதியான செய்தி நிறுவனத்தின் உரிமையாளரை காதலிப்பவள்.   மாயாவின் வீட்டு வேலைக்காரி ருக்ஸானா.ஆயூஸைப் பராமரிப்பதிலி ருந்து சமையல் வேலை வரை செய்ப வள்.  ருக்ஸானா,தனது மனச்சுமைகளை எவரிடமும் பகிராமல் இறுக்கமான முகத்தோடே இருப்பவள்.எப்போதாவது மனபாரம் அழுத்துகையில்,தனியே அழு தும்,வேலைகளை கூடுதலான அக்க றையோடும் செய்து சுமையை குறைப்பவள்.

ருக்ஸானாவின் கணவன் சினிமா துறையில் தினக்கூலி.மகள் ஆலியா படித்துக்கொண்டே, குடும்பத்திற்குத் தெரியாமல் டிக் டாக்-கில் தனது நட னங்களை பதிவேற்றி அதிகமான பின் தொடர்பவர்களைக் கொண்டவள்.இமாத்  என்ற பள்ளி செல்லும் மகனும் உள் ளான். ஒரு வெள்ளிக்கிழமை இரவு, மாயா,  காதலனோடு சிறு அளவில் மது அருந்து கிறாள். அவளது கார் ஓட்டுநர் விடுப்பில் சென்றதால், தூக்க கலக்கத்தோடு தானே  காரை ஓட்டிக் கொண்டு வீடு செல்கிறாள்.  அதே நேரத்தில்,ருக்ஸானா மகள் ஆலியா, வீட்டுக்கு தெரியாமல் தொலை தூரத்தில்,ரோட்டோரம் உள்ள ரயில் நிலையத்திற்கு,தன் ஆண் நண்பனோடு செல்கிறாள். ஆள் நடமாட்டம் இல்லாத  மேம்பால நடைபாதையில் நடனமாட, அதனை இவளது நண்பன் வீடியோ எடுக்கி றான். சூழலை பயன்படுத்தி, திடீரென அவளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்  கிறான். கோபமடைந்த ஆலியா, அவ னைத் தள்ளிவிட்டு மேம்பாலத்திலிருந்து இறங்கி சாலையை நோக்கி ஓடுகிறாள்.  சாலையை கடக்க, அப்போது மாயா வின் காரும் வர; ஆலியா மீது,கார் மோத,  தூக்கி வீசப்படுகிறாள்.ரத்த வெள்ளத்தில் சாலையோர நடைபாதையில் உயி ருக்கு போராடுகிறாள்.பயத்தில் அவளது  நண்பன், மாயா ஆகியோர் ஆலியாவை காப்பாற்றாமல் அப்படியே போட்டுவிட்டு  தப்பிக்கிறார்கள். இச்சம்பவத்திற்கு முன்,வேறொரு நிகழ்வும் அங்கே நடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியின் கவுன் சிலர், குறுக்கு வழியில் பெரும் பொருளா தார வளர்ச்சி கண்டவன் . இவனது பிறந்த நாளை வாழ்த்தி, எப்போதுமே கொண் டாட்ட மனநிலையில் உள்ள இவனது மகன் மற்றும் அல்லக்கைகள்,விபத்து நிகழ்ந்த இடமருகே ப்ளக்ஸ் வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். 

அப்போது, அப்பகுதி காவல் நிலைய  ஏட்டு மற்றும் கான்ஸ்டபிள் குடிபோதை யில் அங்கு வருகிறார்கள். நேர்மையானவரான ஏட்டு, இன்னும் ஒரு மாத காலத்தில் பணி ஓய்வு பெற வுள்ளவர்.  கான்ஸ்டபிள் ரோட்டோரத்தில் சிறுநீர்  கழிக்க; அதனை அல்லக்கைகள் தட்டி கேட்க அவர்களுக்குள் கைகலப்பு ஆகி றது. உடன் கவுன்சிலரின் மகன் லஞ்சமே  வாங்காத ஏட்டுவிடம், அவரது பையில் பணத்தை திணித்து பிரச்னையை முடிக்கிறான். இந்நிகழ்வுகளை அங்கு ரகசியமாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவு செய்கிறது. இவ்விரு நிகழ்வுகளும் ருக்ஸானா குடும்பத்தின் வழக்கமான வாழ்வை தடம் புரளச் செய்கிறது. செய்தி நிறுவன உரிமையாளரின் அறிவுரைப்படி,புதிதாக பணியில் சேர்ந்த  ரோகிணி, நடந்த விபத்தை ரகசிய மாக துப்பறிகிறாள்.இவள் மாயாவை  முன்மாதிரியாக ஏற்றவள். பணத்தேவை யில் உள்ளவள். ரோகிணி தனது துரிதமான விசா ரணையின் மூலம்,மாயா தான்,விபத்தை ஏற்படுத்தியவர் என்பதையும்;போலீஸ் ஏட்டு லஞ்சம் பெற்றதையும் கண்டறி கிறாள்.  இப்போது இவ்விருவரையும் நோக்கி  தனது ரகசியவிசாரணையை நகர்த்து கிறாள்.  ருக்ஸானா நீதி வேண்டி இவ்விபத்தை  வழக்காக்கினாள், ஓய்வு பெறவுள்ள ஏட்டு  பாதிக்கப்படுவான்.கவுன்சிலரின் அரசி யல் ஸ்தம்பிக்கும்.மாயாவின் நற்பெயர் கெடும். இச்சூழலில் பணத்தேவையிலுள்ள ரோகிணியை,லஞ்சம் வாங்கிய ஏட்டு, அவனது பணி ஓய்வை கருத்தில் கொண்டு, விசாரணையை அவனுக்கு சாதகமாக்க கெஞ்சுகிறான்.பேரம் பேசுகிறான்.  இதேபோல் கவுன்சிலர் தரப்பு சார்பாக  போலீஸ்,ருக்ஸானாவின் குடும்பத்திடம் வழக்கை வாபஸ் பெற விலை பேசு கிறது. ருக்ஸானா குடும்பம்,ரோகிணி ஆகி யோர் போலீஸ் மிரட்டலுக்கும், கெஞ்ச லுக்கும் அடிபணிந்து விலை போனார் களா?

குற்ற உணர்வுக்கு உள்ளான மாயா, எடுத்த முடிவு என்ன? மாயாதான் ஆலியாவை விபத்திற்  குள்ளாக்கினாள் என்பதை அறிந்த ருக் ஸானா, மாயாவை பழிவாங்கினாளா? இக்கேள்விகளுக்கெல்லாம் மன சாட்சியோடு நல்ல பதிலை சொல்கிறது மீதிப்படம். மாயா முதல் ரோகிணி வரையான பல தரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட  கதைமாந்தர்கள், விபத்துக்கு முன்னும்  பின்னும் எவ்வாறு தங்களது வசதிக்கேற்ற வாறு, மனசாட்சியை அடகு வைக்கிறார் கள் என்பதை இப்படம் துல்லியமாகக் காட்டுகிறது. “உண்மையை எதிர்கொள்ளுங் கள்”என்ற நிகழ்ச்சியில் பல பிரபலங்க ளின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிட்ட மாயா; விபத்துக்குப் பின்  அவளது உண்மையிடம் நெருங்க பயப் படுகிறாள். உண்மை மறைக்கப்பட்ட ருக்ஸா னவோ, அதனை அறியும் போது, மாயா வை பழி வாங்க ஆவேசமாக மனதுக்குள் துடிக்கிறாள்.   உண்மையின் கண்ணாம்மூச்சி ஆட்  டமே வாழ்க்கை என்பதனை இப்படம் சிறப்பாக சொல்கிறது .  வழக்கை வாபஸ் வாங்க ருக்ஸானா  குடும்பத்திற்கு கொடுக்க, ₹25 லட்சம் கவுன்சிலரிடம் அவனது மகன் கேட்பான்.அதற்கு கவுன்சிலர், “ஒரு காலத்தில் தார் பேரலை ஒரு கிலோமீட்டர் உருட்டிச்  சென்று 50 பைசா கூலி பெற்றேன்.தற்போது 25லட்சத்திற்கு செவ்வாய் கோள் வரை தார் பேரலை உருட்டிச் செல்லவேண்டும்”எனக் கூறுகின்ற வசனம் சுவாரஸ்யமானது. 

கடல் நீர் உள்வாங்கும் காட்சி, ருக்ஸா னாவின் கோபம் வடிந்தமைக்கான படிம மாகக் காட்டப்பட்டுள்ளது.   மாயா மேனன் ஆக வித்யா பாலன்,  வீட்டு வேலைக்காரி ருக்ஸானாவாக நடித்த ஷேஃபாலி ஷா, ஸ்பெஷல் சைல்ட்  ஆயூஸாக நடித்த சூர்யா, ஏட்டாக  நடித்த ஸ்ரீகாந்த் யாதவ், ரோகிணி ஜார்  ஜாக நடித்த விதார்ட்ரி ஃபாண்டி, ஆலி யாவாக நடித்த ரிஸ்வான்; ஆகியோர் நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர். ஆனால் ஷேஃபாலி ஷாவ்வின் ஒப்பற்ற நடிப்பே, அவரை முதன்மை பெறச் செய்  கிறது.  மத அடையாளத்தை உணர்த்தும் மெல்லிசை;அடுத்தடுத்த எதிர்பார்ப்பை உருவாக்கிய சிறப்பான நேர்கோட்டு திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு.இரவு நேர மும்பை மற்றும் மழைக்கால மும்பை ஆகியவற்றை கண் முன் நிறுத்தும் சிறப்பான ஒளிப்பதிவு. இயக்குநர் சுரேஷ் திரிவேணி கதா பாத்திரங்களின் மனசாட்சிகளை இயக்கி  புதுமை செய்துள்ளார்.  2022 இல் வெளியான இப்படம் பிரைம்  அமேசானில் உள்ளது.