tamilnadu

img

விதவை மறுமணம் - தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி - கோலப்பன்

அருட்தந்தை ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால் என்ற பிரெஞ்சு இயேசு சபை அருட்பணியாளர் திருச்சியில்  ஒரு விதவைப் பெண்ணுக்கும், வெள்ளாளர் சமூக இளைஞனுக்கும் திருமணத்தை ரகசியமாக நடத்தி வைத்தார். அருட்பணியாளர் மாற்கு ஸ்டீபன், சே.ச, ‘முன்னத்தி” என்கிற தமிழ் வாழ்க்கை வரலாற்று நாவலில் டிரிங்கால் அவர்களின் நற்குணங்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

1844-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு திருச்சி யையே உலுக்கியது. இடைநிலை சாதிகள் மற்றும் தலித்துகளிடையே விதவை மறு மணம் பரவலாக நிலவிய போதிலும், பிராம ணர்களுக்கும், வெள்ளாளர் உள்ளிட்ட மற்ற  சாதி இந்துக்களுக்கும் இது வெறுப்பூட்டு வதாகவே இருந்தது. புனித மரியன்னைப் பேரா லயத்தின் தற்காலிகப் பொறுப்பு பங்குகுரு வாக இருந்த அருட்தந்தை ஜான் பாப்டிஸ்ட்  டிரிங்கால் என்ற பிரெஞ்சு இயேசுசபை அருட்பணியாளர் ஒரு விதவைப் பெண்ணுக்கும், வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஓர் இளை ஞனுக்கும் நடந்த திருமணத்தை தலைமை யேற்று ரகசியமாகநடத்தி வைத்தார். இது விதவை மறுமணத்திற்கும், அவர்களின் மறு வாழ்விற்கும் வழி வகுத்தது. சாதி இந்துக்களிடையே விதவை மறுமணம்  வழக்கத்தில் இல்லையென்ற சூழலில் இளை ஞர்கள் சிலர் தம்மிடம் வேண்டுகோளோடு வந்த தால் அதிர்ச்சியுற்றார் டிரிங்கால். புதிய நம்பிக்  கையை ஏற்றுக் கொண்டவர்களிடம் கூட கிறிஸ்தவத்தால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்விதான் அவர் முன் நின்றது. ‘அந்தப் பூனைக்கு மணியை நான் ஏன் கட்டக்கூடாது?” என்ற உத்வேகம் டிரிங்காலைப் பற்றிக் கொண்டது. ‘இப்படிப்பட்ட திருமணத்தை ஆசீர்வதிக்க இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கி யுள்ளார்” என்று அவர் சிந்தித்தாக அருட்பணி யாளர் மாற்கு ஸ்டீபன் எழுதியுள்ள ‘முன்னத்தி”  என்ற வாழ்க்கை வரலாற்று நாவலில் தத்ரூப மாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

‘சதி” குறித்த ஆவணங்கள்

திருமணங்களை ஆசீர்வதிக்குமுன் ‘சதி”  (கணவன் இறந்ததும் உடலோடு உடன்கட்டை ஏறுதல்) குறித்து அருட்பணியார் பீட்டர் மார்ட்டின்  என்கிற இயேசு சபை அருட்பணியாளர் தொகுத்து வைத்திருந்த ஆவணங்களை யெல்லாம் கவனமுடன் படித்து அறிந்து கொண்  டார் டிரிங்கால். குறிப்பாக ராமநாதபுரத்தில் மன்னன் கிழவன்  சேதுபதியின் 47 மனைவிகளின் ‘சதி” உட்பட இந்தச் சடங்குமுறை, மதுரைப் பகுதிகளில் பொதுவாகவே வழக்கத்தில் இருந்து வந்தது. இந்த நாவல் அந்த நிகழ்வுகளை தெளிவாக எடுத்துரைக்கின்றது. மதுரையை ஆண்டுவந்த மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் இறப்பதற்கு முன் கருவுற்றி ருந்த அவரின் மனைவி முத்தம்மாள், முத்து வீரப்ப நாயக்கர் இறந்த பிறகு, குழந்தை பிறக்  கும்வரை பொறுத்திருந்து, தனக்கு குழந்தை பிறந்தவுடன் தன் உயிரை மாய்த்துக் கொண் டாள். திருமலை நாயக்கர் இறந்த பொழுது அவ ரின் 200 மனைவிமார்கள் அவரின் எரிந்த  உடலில் தாமும் விழுந்து உயிரை மாய்த்துக்  கொண்டார்கள். படித்து மனம் பதைத்த  டிரிங்கால் அடிகளார், ஏன் இந்தக் கொடிய பழக்க வழக்கங்களை மிஷனரிகளால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்று வியந்தார். ‘முன்னோடி” அல்லது ‘தலைவர்” என்று இந்த நாவலுக்கு தலைப்பிட்டதைக் குறித்து தெளிவாக விளக்குகிறார் அருட்பணியாளர் மாற்கு ஸ்டீபன். ‘நிலத்தை உழுகிறபோது, முன்னே உழுது செல்லும் ஒரு ஏரைப் பின்தொடர்ந்து மற்று ஏர்கள் உழுதுகொண்டே செல்லும். 1844 முதல் 1892 வரை 48 ஆண்டு களாக மதுரை மிஷனின் ‘முன்னத்தி ஏர்” அருட்பணியாளர் டிரிங்கால், சேச.” என்று கூறு கிறார் நாவலாசிரியர் மாற்கு ஸ்டீபன்.

திருச்சியில் முகாமிட்டிருந்த அயர்லாந்து ராணுவ வீரர்களுக்கென்று போதை மறு வாழ்வுத் திட்டத்தைத் தொடங்கிய முதல் மிஷ னரி, டிரிங்கால் அவர்கள்தான். தமிழில் தன்  பெயரை அருளப்பசாமி என்று மாற்றி வைத்துக் கொண்டார். ஒட்டுமொத்தமாகக் குடிப்பழக்கத்தை நிறுத்துவதை வலி யுறுத்தாமல், குடிப்பதன் அளவைக் குறைத்துக்  கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியதோடு, இசையில் ஆர்வம் கொண்ட அயர்லாந்து ராணுவ வீரர்களை ஒருங்கிணைத்து ஆலய  இசைக்குழு ஒன்றையும் அழகாக உருவாக்கி னார் டிரிங்கால். அவர் எங்கெல்லாம் பணி  செய்தாரோ, அவ்விடங்களில் நிரந்தர வருமா னம் ஈட்டித்தரும் நிலங்களை வாங்கினார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தில் குறிப்பாக தலித் மாணவர்களுக்கென்றே பிரத்தி யேகமாக ஒரு பள்ளி உள்ளிட்ட இன்னும் சில  பள்ளிகளையும் தொடங்கி நடத்தினார். மிகப்  பெரும் அறிஞர்களான புனித பிரான்சிஸ், சவேரி யார், வீரமா முனிவர், ராபர்ட் டி நொபிலி உள்ளிட்ட  ஆகச் சிறந்த மிஷினரிகளைக் கொண்டிருந்த அதே பழைய மதுரை மிஷனின் உறுப்பினரான டிரிங்கால், விதவை மறுதிருமணம் மற்றும்  தீண்டாமை ஒழிப்பு ஆகிய சமூக சீர்திருத்த  செயல்பாடுகளில் தன் முழுக் கவனத்தையும்  செலுத்தினார். தலித்துகளின் முன்னேற்றத்திற் கான அர்ப்பணத்தோடு பணியாற்றியதை இந்த  ‘முன்னத்தி” நாவலில் வரும் காட்சி ஒன்று அழ காக பிரதிபலிக்கிறது. தூய வளனார் கல்லூரி யை நிர்மாணிக்குமுன் நடந்த விவாதத்தின்போது  ‘தலித்துகள் அங்கே அனுமதிக்கப்படுவார் களா?” என்ற கேள்வியைத்தான் முதன்முதலில் அவர் கேட்டார். இயேசு சபையைச் சேர்ந்தவரும், புதுப்பட்டி  கிராமத்து மண்ணின் மைந்தருமான அருட்பணி யாளர் மாற்கு புதுப்பட்டியின் முதல் பங்குகுரு வான டிரிங்காலுடன் ஓர் அன்புப் பிணைப்பைத் தனக்கென உருவாக்கிக் கொண்டுள்ளார். 1875  முதல் 1892 வரை மதுரையில் மரிக்கும் வரையில்  அங்கே டிரிங்கால் பங்குப் பணியாளராக பணி புரிந்துள்ளார்.

‘எங்கள் ஊர் ஆலயம் இருக்கும் தெருவின் முதல் வீட்டில்தான்  நான் பிறந்தேன். நாள் முழுவதும் ஆலய வளாகத்தில் விளை யாடிவிட்டு சாப்பிடும் நேரத்திற்கு மட்டுமே தங்கள் வீடுகளுக்குச் செல்வார்கள் குழந்தைகள்” என்று பால்ய காலத் தனது நினைவு களை இந்நாவலின் முன்னுரையில் நினைவு கூறுகிறார் மாற்கு ஸ்டீபன்.

புரட்சியின் தாக்கம்

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பிரெஞ்சுப் புரட்சி யின் முழக்கங்களால் தூண்டப்பட்டார், 1815-ல் பிரான்ஸ் தேசத்தில் பிறந்த டிரிங்கால் ‘கிறிஸ்தவம் தனது சுயமான இலக்கிலிருந்து மாறு பட்டுச் சென்ற காரணத்தால் தன் தாய்நாடு புரட்சியையும், இரத்தக்  களரியையும் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று டிரிங்கால் தீர்க்கமாக  உணர்ந்தார்” என்று நினைவுகூறுகிறார் அருட்பணியாளர் மாற்கு. இத்தாலியிலிருந்து சில இயேசு சபை அருட்பணியாளர்களுடன் புறப்பட்ட ‘காங்கிரேட்” (ஊழபெசயனந) என்ற கப்பலில் தனது பய ணத்தை தொடங்கும் டிரிங்கால் இந்த நாவலின் முதல் அத்தி யாயத்தில் கிறிஸ்தவத்தின் கருத்துக்களை விளக்குவதாக அமைந்துள்  ளது. 18-ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவரால் தடை செய்யப்பட்ட  இயேசு சபையின் மதுரை மிஷனில் இருந்து பணியாற்றப் போவதில்  அவர்களனைவருமே உறுதியாக இருந்தனர். ‘பிரான்சுக்கு நான் திரும்பிச் செல்லப் போவதில்லை என்னும் என்  தீர்மானத்தில் உறுதியாய் இருக்கிறேன். என் பெற்றோர், உற்றார், உற வினர், சுற்றத்தார், நண்பர்கள், என் சொந்த ஊர், நாடு, மொழி அனைத்தையும் விட்டு புறப்படுகிறேன். எனது உடல் மட்டுமே இங்கு  உள்ளதே ஒழிய, என் இதயம் இந்தியாவின் மதுரை மிஷனில்தான் உள்ளது” என்று அந்தக் கப்பலின் கேப்டனிடம் சொன்னார் டிரிங்கால்.

பிரான்சு நாட்டில் டிரிங்காலின் வாழ்வு, அவரது தொடக்ககால நாட்கள் மற்றும் மதுரை, திருச்சி, நாகபட்டிணம், இறுதியாக புதுப பட்டி ஆகிய பணித்தளங்களில் அவரின் மிஷனரிப் பணிகளின் காலத்தை முன்னும் பின்னும் விவரணையாக இந்த நாவல் தொட்டுச்  செல்கிறது. நாகப்பட்டினத்தில் தலித் மக்களோடும், அவர்களின் குழந்தைகளோடும் தங்கி, உணவு உண்டு, வாழ்ந்து வந்த டிரிங்காலால் விரைவிலேயே தமிழ் கற்றுக் கொள்ள முடிந்தது. விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த முதல் மிஷனரி என்று புகழ்பெற்றதை வைத்தே, டிரிங்காலின் மொழிப் புலமையையும், ஆளுமையையும் உணர முடிகிறது. புதுப்பட்டி யில் தலித்துகளுக்கென்று ஓர் ஆலயத்தையே கட்டி முடித்து, யாரா லும் முடியாது என்று நினைத்திருந்ததை, முடியும் என்று சாத்திய மாக்கிக் காட்டியவர் டிரிங்கால். தலித் மக்கள் சாதி இந்துக்களின் தெருக்கள் வழியாக சென்று ஆலயத்திற்கு நடந்து செல்ல வைத்தார். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியும், ஆலயங்களைத் தீக்கிரையாக்கியும் வந்த உள்ளூர் ஜமீன்தார்களுடன் பல நேரங்க ளில் அடிக்கடி சண்டையிடவும் நேர்ந்தது. தான் மரித்ததும் புதுப்பட்டி யில் அடக்கம் செய்யப்பட விரும்பிய போதும், தன் வயிற்றுவலிப் பிரச்சனைக்கான சிகிச்சைக்காக மதுரையிலிருந்துபோது தன் சிந்தனையை மாற்றிக் கொண்டார். மதுரை வியாகுல அன்னைப் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் அருட்பணியாளர் டிரிங்கால்.

தமிழில்: ஜான் பிரபாகர் .ஜா நன்றி: தி ஹிந்து (5.01.24)

 

;