tamilnadu

img

ஓராண்டில் 214 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

சென்னை, ஜூலை 1 - நாட்டுப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சி மடம்,  பாம்பன் பகுதியைச் சேர்ந்த 4 நாட்டுப் படகுகளையும், அதில்  மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை யும், இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிரு ஷ்ணன் தமது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்களையும், 4 நாட்டுப் படகு களையும் கச்சத்தீவுக்கு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவ்வாறு ஓராண்டில் மட்டும் இருநூறுக்கும் மேலான மீனவர் களையும், 28 படகுகளையும் பிடித்து வைத்துள்ள இலங்கை கடற்படை யின் தொடரும் இந்த அட்டூழியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதுவரை இழுவலையை பயன்படுத்தி வந்த மீனவர்களை, தங்கள் நாட்டு மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக கூறி கைது செய்து வந்த இலங்கை கடற்படை, தற்போது வழி வலையை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட நாட்டுப் படகு மீனவர்களையும், படகுகளையும் கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் மட்டும் இது போன்ற கைது நடவடிக்கை களில் சுமார் 50 மீனவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 17 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. ஜூன் 22 அன்று இராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர். ஒரு வாரம் முன்பு நாகை  மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீன வர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்போது, ஜூன் 30 அன்று மீண்டும் 24 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.  கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 214 மீனவர்கள் கைது செய்யப் பட்டும், 28 படகுகள் கைப்பற்றப்பட்டி ருப்பதையும் இலங்கை அரசின்  செய்திக் குறிப்புகள் உறுதிப்படுத்து கின்றன. இவ்வாறு, நடைபெறும் தொடர்  கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விழும் பேரிடியாகும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் மீனவர் பிரச்ச னையை பற்றி ஜம்பமாக பேசி வந்த பாஜக, தனது அதிகாரத்தை வைத்து  மீனவர்களை காக்க துரும்பையும் கிள்ளியதில்லை. தமிழ்நாட்டு மீன வர்கள் பாதிக்கப்படும் போதெல் லாம் கள்ள மௌனம் சாதித்து கடந்து விட நினைக்கிறது.  அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனையைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் கொடுத்தார். அதில் உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

ஆனாலும், இலங்கை அரசின் கைது நடவடிக்கைகளோ, படகுகள் சிறைப்பிடித்தலோ நிற்கவே இல்லை. இலங்கை கடற்படையின் அட்டூ ழியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக் கிறது. இந்திய அரசாங்கம் உறுதி யான நிலை எடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடி உரிமை யையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.

;