districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிபிஎம் உறுப்பினர்  அட்டை வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின், திருச்சி புறநகர் மாவட்டம் வை யம்பட்டி ஒன்றிய பேரவை மற்றும் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச்  செயலாளர் வெள்ளைச் சாமி தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப் பினர் சுப்பிரமணியன் இன்றைய அரசியல் நிலை, நமது கட்சி உறுப் பினர்களின் பங்கு, ஒன்றி யத்தில் கட்சி விரிவாக்கம்  குறித்து சிறப்புரையாற்றி உறுப்பினர் அட்டை வழங்கினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

கண் பரிசோதனை முகாம்

பாபநாசம், ஜூலை 1- கும்பகோணம் வாஸன் கண் மருத்துவ மனை, பாபநாசம் அட்ச யம் லயன்ஸ் கிளப் இணைந்து பள்ளி மாண வர்களுக்கு இலவச கண்  பரிசோதனை முகாமை நடத்தின.  தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம், வங்காரம் பேட்டை அரசு உதவிபெ றும் தொடக்கப் பள்ளி யில் 90 மாணவர்கள், ஆசி ரியர்களுக்கு கண்ணில் பரிசோதனை மேற்கொள் ளப் பட்டது. இதில்  கண்ணில் குறைபாடு உடைய 18 மாணவர் களுக்கு கண்ணாடி  அணிய பரிந்துரைக்கப்பட் டது. அட்சயம் லயன்ஸ்  கிளப் தலைவர் வக்கீல் சரவணன், செயலர் மணி,  பொருளாளர் சந்துரு, முதல் துணைத் தலைவர் சிவக்குமார், சேவைத்  திட்ட ஒருங்கிணைப்பா ளர் பரணிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வருவாய்த் துறை தின கொடியேற்றம்

தஞ்சாவூர், ஜூலை 1- வருவாய்த் துறை தினத்தையொட்டி, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரு வாய்த் துறை அலுவ லர்கள் சங்கம் சார்பில்  கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத் தின் வட்டத் தலைவர் எஸ். கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி கொடியேற்றி சிறப்புரை யாற்றினார். வட்டாட்சியர் அருள்ராஜ், வட்டச் செய லாளர் ஆர்.சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாநிலச் செயலா ளர் எஸ். கோதண்ட பாணி, அரசு ஊழியர் சங்க  வடக்கு வட்டச் செயலா ளர் அஜய்ராஜ், சங்க நிர்வாகி விஜயபாஸ்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வட்ட துணைச் செயலாளர் பழனிகுமார் நிறைவுரையாற்றினார். முன்னதாக தனித் துணை வட்டாட்சியர் எம். மதியழகன் வரவேற்றார். சங்கத்தின் வட்டாரப் பொருளாளர் எஸ்.ஆர். வினோத் நன்றி கூறினார்.

தென்னை மரத்தில் தீ

அறந்தாங்கி, ஜூலை1- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடை யார்கோவில் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்திற் குள் தென்னை மரங்கள்  உள்ளன. ஞாயிறன்று பெய்த மழையின் காரண மாக, இடி தாக்கியதில் இங்குள்ள தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந் தது. இதுகுறித்து அக்கம்  பக்கத்தினர் ஆவுடை யார்கோவில் தீயணைப் புத் துறைக்கு தகவல்  கொடுத்தனர். தீயணைப்பு  வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

நியாய விலைக் கடை  அமைக்கக் கோரி மனு

அரியலூர், ஜூலை 1-  தலையாரி குடிக்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை  அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் தலையாரிக் குடிக்காடு கிராமத்தில்  சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள க.பொய்யூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு செல்ல வேண்டியுள்ளது.  இதனால் பெரும்பாலான நாட்களில் ரேசன் பொருட்கள்  தீர்ந்து விடுவதாகவும், எங்களுக்கு ரேசன் பொருட்கள் முழுமையாக கிடைக்கவில்லை எனவும் கூறி தலையாரி குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவை சந்தித்து, “எங்கள் கிராமத்திற்கு தனியாக ரேசன் கடை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என மனு அளித்தனர். அப்போது, நடமாடும் ரேசன் கடையை செயல்பாட்டிற்கு  கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார்.

கொத்தடிமையாக வாத்து மேய்த்த இரு சிறுவர்கள் மீட்பு

தஞ்சாவூர், ஜூலை 1- தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக வாத்து மேய்த்துக்  கொண்டிருந்த 2 சிறுவர்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனர். தஞ்சாவூர் அருகே, மருங்குளத்தில் உள்ள விளை நிலத்தில் 2 சிறுவர்கள் கொத்தடிமையாக வாத்து மேய்த்துக் கொண்டிருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் துறை, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, வருவாய்த் துறை அலுவலர்கள் மருங்குளத்தில் சனிக்கிழமை விசாரணை  மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 10 மற்றும்  13 வயது சிறுவர்கள் கொத்தடிமையாக வாத்து மேய்த்துக் கொண்டிருப்பதும், இருவரது பெற்றோர்களிடமும் ஆந்திர  மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் தலா ரூ.30 ஆயிரம் கொடுத்து, இருவரையும் அழைத்து வந்திருப்பதும் தெரிய வந்தது.  இதையடுத்து, இரு சிறுவர்களையும் அலுவலர்கள் மீட்டனர். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து லட்சுமணனை தேடி வருகின்றனர்.

அரசு நிலத்தை மீட்காத நகராட்சி தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பதா? சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை, ஜூலை 1 - அரசு புறம்போக்கு இடங்கள் இருந்தும் தனியாருக்குச் சொந்தமான இடத்தை புதுக்கோட்டை நகராட்சியே ஆக்கிரமித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது.  இது தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: புதுக்கோட்டை அசோக் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டு வதற்கு 18 ஆயிரம் சதுர அடி பரப்பள வில் ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்படி ஒதுக்கப்பட்ட இடத்தை  வேறு தனி நபர் ஆக்கிரமிப்பு செய் துள்ளார். அந்த இடத்தை மீட்டு அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவ தற்குப் பதிலாக, தனியாருக்குச் சொந்த மான வேறு இடத்தை ஆக்கிரமித்து சுகா தார நிலையத்தை கட்டுவற்கு நகராட்சி  நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை அசோக் நகர் பகுதி யில் பொதுப் பயன்பாட்டிற்கு தேவை யான அரசுப் புறம்போக்கு இடங்கள் நிறைய இருந்தும், தனியாருக்கு சொந்த மான இடத்தை ஆக்கிரமித்து அரசு சுகாதார நிலையம் கட்ட வேண்டிய அவ சியம் என்ன? நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய அராஜக, அத்துமீறும் நட வடிக்கைகயை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக் கிறது. எனவே தனியாருக்குச் சொந்தமான  இடத்தை ஆக்கிரமித்து அரசு ஆரம்ப  சுகாதார நிலையம் கட்டும் நடவடிக் கையை நகராட்சி நிர்வாகம் உடனடி யாக கைவிட வேண்டும். ஏற்கனவே, ஒதுக்கப்பட்ட இடத்தில் சுகாதார நிலை யத்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வா கம் முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்து வோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விபத்துகளால் உயிரிழப்பு பழைய கரியப்பட்டி சர்வீஸ்  சாலையை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 1- விபத்துகளை தடுக்கும் வகையில், திருச்சி - தஞ்சை  தேசிய நெடுஞ்சாலையில், பழைய கரியப்பட்டி சர்வீஸ்  சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பூதலூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆ.கரிகாலன், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்த கோரிக்கை  மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா, பழைய கரியப்பட்டி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து  வருகிறோம். தினமும் ஏராளமானோர் இச்சாலையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய கரியப்பட்டி சர்வீஸ் சாலையை முழுமைப்படுத்தாமல் உள்ளனர். இதனால் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் பயணிக்கும் நிலை  உள்ளது.  இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு  உயிரிழக்கும் நிலை உள்ளது. நாங்கள் பலமுறை அதி காரிகளிடம் தெரிவித்தும் சர்வீஸ் சாலை சரி செய்யப்படா மல் உள்ளது. எனவே குறுக்கிடும் பாலத்தை சரி செய்து  தார்ச்சாலை அமைத்து, சர்வீஸ் சாலையை முறைப்படுத்தி  தர வேண்டும். விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் தின விழா
பாபநாசம்/அறந்தாங்கி, ஜூலை 1 - மருத்துவர்கள் தினத்தையொட்டி, பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குமரவேல், தனம்  ஆகியோருக்கு கதர் ஆடை போர்த்தி பரிசு வழங்கப் பட்டது.  இதில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல், செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராமநாதன்,  உதவி ஆளுநர் அறிவழகன், முன்னாள் உதவி ஆளு நர்கள், தலைவர்கள்  பங்கேற்றனர். அன்னப் பூர்ணா திட்டத்தின்கீழ் பாபநாசம் பேரூராட்சி தூய்மைப் பணியா ளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் சார்பில் பாபநாசம் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் குமரவேல், தனம்,  பாபநாசத்தை அடுத்த பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவர்கள் அழகு, சிலம்பரசி, ஹரிணி ஆகியோருக்கு  கதர் ஆடை போர்த்தி கெளரவித்து இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில்,  செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் மாரிமுத்து, மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், வட்டாரத் தலைவர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.    அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை  மருத்துவமனையில் அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் மற்றும் திருச்சி அப்போலோ மருத்துவமனை இணைந்து ஆசை மகள் திட்டம் மற்றும் மருத்துவர் தின விழாவை கொண்டாடினர். மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசை மகள் திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து பொருட்கள்  வழங்கினர். தொடர்ந்து மருத்துவர் களைப் பாராட்டும் விதமாக, அனைவருக்கும் சிறந்த மருத்துவர் விருது வழங்கினர். நிகழ்ச்சியில் அறந்தாங்கி தலைமை மருத்துவர் சேகர்  மற்றும் அப்போலோ மருத்துவமனை மூத்த பொது மேலா ளர் ஜெயராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்க  பட்டயத் தலைவர் தங்கதுரை மற்றும் மண்டல ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் துணை ஆளுநர் கணேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 1 -   மயிலாடுதுறையில் மின் வாரிய நிரந்தரப்  பணியாளர்களின் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் வாரிய செயற்பொறியாளர் அலுவல கம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஏராளமான மின் ஊழியர்கள் பங்கேற்றனர். மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும். வேலை பளு  ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிடப் பட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள  அநீதிகளை களைந்து அரசு உத்தரவாதத் துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். மின் வாரியத்தை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட  வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் மற்றும்  பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக  உறுப்புக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

அரியலூர், ஜூலை 1 - அரியலூர் அருகே அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரி பேராசிரி யர்கள் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியி யல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நி லையில் கல்லூரியில் பணியாற்றும் பேரா சிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்க! தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு  மாதங்களுக்கு ஒருமுறை பணி நீட்டிப்பு  கடிதம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில் சில தற்காலிக பேரா சிரியர்களுக்கு பணி நீட்டிப்பு கடிதம் வழங்க வில்லை எனவும், இதற்கு கல்லூரி முதல்வர் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினர்.  மேலும் கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச் செல்வன் மீது பாலியல் மற்றும் பல்வேறு  புகார்களை கூறிய தற்காலிக பேராசிரி யர்கள் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணி நீட்டிப்பு கடிதம் வழங்க தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இவ்வாறு  பேராசிரியர்களுக்கு எதிராக செயல்பட்டு  வரும் கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல் வனை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்லூரியில் பணியாற்றும் தற்கா லிக பேராசிரியர்கள் மற்றும் நிரந்தர பேராசிரி யர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மின் கசிவால் எரிந்த வீட்டிற்கு இழப்பீடு கோரி மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இதில் லால்குடியைச் சேர்ந்த நாட்டின் துரைராஜ் என்பவர் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “நான் கூரை வீட்டில் வசித்து வந்தேன். கடந்த ஜூன் 16 அன்று எனது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடு  முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது. தற்போது வசிக்க வீடு இல்லை. எனவே தீயில்  எரிந்த எனது வீட்டை கட்டித் தருமாறும், வாழ்வார நிதி உதவி வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். இதேபோன்று புள்ளம்பாடி யூனியன்  ஆபீஸ் அருகில் வசிக்கும் அந்தோணி யம்மாள் மாவட்ட ஆட்சியிடம் கொடுத்த மனு வில், “நான் கடந்த 55 வருடமாக அரசு புறம் போக்கு நிலத்தில் குடியிருந்து வருகிறேன். எனது வீட்டின் பின்புறம் வசித்து வருபவர் செல்வதற்கு 8 அடி பாதை உள்ளது. இருந்த போதிலும். எனது வீட்டை இடித்து வழி விட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து இடையூறு கொடுக்கின்றனர். எனவே இந்த இடத்தை உரிய ஆய்வு செய்து பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.  ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது  தமிழ்நாடு விவசாயிகள் சங்க புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் அருமைதாஸ் உடனிருந் தார்.

 

 

 

;