districts

img

6 ஊராட்சி ஒன்றியங்களில் 25 புதிய குளங்கள் ரூ.3.13 கோடியில் அமைப்பு

கரூர், ஜூலை 1 - கரூர் மாவட்டம், தோகை மலை ஊராட்சி ஒன்றியம் கூட லூர் ஊராட்சி கண்ணூத்து மடையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ்  புதி தாக அமைக்கப்பட்டு வரும் குளத்தினை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஜூன் 26 அன்று செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரி விக்கையில், “பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ் நாடு அரசால் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இத்தகைய திட்டங் களை தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரு வதை உறுதி செய்திடும் வகை யில் தொடர் ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை வழி யாம்புதூர் வடக்குப் பகுதியில் ரூ.13.18 லட்சம் மதிப்பீட்டிலும், வெள்ளியணை வழியாம்புதூர் தெற்குப் பகுதியில் ரூ.16.67 லட்சம் மதிப்பீட்டிலும், கோயம் பள்ளி ஊராட்சியில் ரூ.16.67 லட்சம் மதிப்பீட்டிலும், புத்தாம் பூர் ஊராட்சி, வடுகப்பட்டி மேற்கு பகுதியில் ரூ.5.70 லட்சம்  மதிப்பீட்டிலும், மணவாடி  ஊராட்சி, அய்யம்பாளையத் தில் ரூ.6.84 லட்சம் மதிப்பீட்டி லும் என மொத்தம் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய  குளங்கள் அமைக்கப்படுகின்றன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றி யத்தில், துக்காச்சி ஊராட்சி வேலாயுதம் பாளையத்தில் ரூ.24.75 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னிலை மேற்கு ஊராட்சி அரிக்காரன்பாளையத்தில் ரூ.24.23 லட்சம் மதிப்பீட்டிலும், கோடந்தூர் ஊராட்சி வடகரை பகுதியில் ரூ.26.77 லட்சம் மதிப் பீட்டிலும் என மொத்தம் ரூ.75.75  லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய  குளங்களும், கிருஷ்ணராய புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மணவாசி மயானம் அருகில் ரூ.8.78 லட்சம் மதிப்பிலும், மாய னூர் காரஞ்சி களம் அருகில் ரூ.2.89 லட்சம் மதிப்பீட்டிலும், பன்னீர்பட்டி கல்லாங்குத்து அருகில் ரூ.2.61 லட்சம் மதிப் பீட்டிலும், சித்தலவாய் ஊராட்சி  மேலடையில் ரூ.3.29 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.17.57 லட்சம் மதிப்பீட்டில் 4  புதிய குளங்களும் அமைக்கப் படுகின்றன.  கடவூர் ஊராட்சி ஒன்றியத் தில் சுக்காம்பட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும், சுருமான் பட்டியில் ரூ.15 லட்சம் மதிப் பீட்டிலும், எழுவக்கரியூரில் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டிலும், கஸ்தூரி குரும்பப்பட்டியில், வடவம்பாடியில் ரூ.9.10 லட்சம்  மதிப்பீட்டிலும், ஓனாப்பாறைப் பட்டியில் ரூ.12.70 லட்சம் மதிப் பீட்டிலும், சின்னதேவன்பட்டி யில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட் டிலும், பாரப்பட்டி வடக்கு பகுதியில் ரூ.9.10 லட்சம் மதிப் பீட்டிலும் என மொத்தம் ரூ.95.19  லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய குளங்களும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக் கன்பட்டியில் ரூ.13.03 லட்சம் மதிப்பீட்டிலும், சீத்தப்பட்டியில் ரூ.10.14 லட்சம் மதிப்பீட்டிலும், பால்வார்பட்டியில் ரூ.20.51 லட்சம் மதிப்பீட்டிலும் என ரூ.43.68 லட்சம் மதிப்பீட்டில் 3  புதிய குளங்களும் அமைக்கப் படுகின்றன.  தோகைமலை ஊராட்சி ஒன்றியம் கண்ணூத்துப்பட்டி, கண்ணூத்துமடையில் ரூ.18.87 லட்சம் மதிப்பீட்டிலும், கள்ளை  களர்பட்டியில் ரூ.10.67 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.29.54 லட்சம் மதிப்பீட்டில் 2  புதிய குளங்களும் என மொத் தம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 25  புதிய குளங்கள் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், உரிய  கால அளவிலும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்றார். ஆய்வின்போது குளித்தலை  வருவாய் கோட்டாட்சியர் தன லெட்சுமி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் பரமேஸ்வரன், இரா ஜேந்திரன், செய்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவ லர்கள் உடனிருந்தனர்.

;