tamilnadu

img

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு மருத்துவத்திற்கு நீட் தேர்வு கூடாது!

சென்னை, ஜூலை 1- ‘நீட் தேர்வு வேண்டாம்; 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கூடாது; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர் கல்வியில் 1 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும’ என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மாநில கல்விக் கொள்கைக்குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  மாநிலத்துக்கான தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநி லத்திற்கு என்று தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம்  தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட கல்விக் கொள்கைக் குழு அமைக்கப்பட்டது.  

கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்ட ளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு,  தமிழில் 600 பக்கங்களும் ஆங்  கிலத்தில் 500 பக்கங்களையும் கொண்ட அறிக்கையை, திங்களன்று (ஜூலை 1) சென்னை தலைமைச் செய லகத்தில் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

அவற்றில் இடம்பெற் றுள்ள முக்கியப் பரிந்துரை கள் வருமாறு:

பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம்; தொடக்க நிலை முதல் பல்க லைக்கழக நிலை வரை தமிழ்  வழிக் கல்வியை வழங்க வேண்டும்; இருமொழிக் கொள்கையை தொடர வேண்  டும்; 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு களுக்கான பொது தேர்வுகள்  இருக்கக்கூடாது.

கல்வி மாநில பட்டியலில்  வரவேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது. நீட் உள் ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி  அளிக்கும் மையங்கள் மற்றும்  தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும். கல்லூரி சேர்க்கையின் போது 12-ஆம் வகுப்பு மதிப்  பெண்களுடன் 11ஆம் வகுப்பு  மதிப்பெண்களையும் கணக் கில் எடுக்க வேண்டும். சிபி எஸ்இ, நிகர்நிலைப் பல்க லைக்கழகங்கள் ஆகிய வற்றுக்கான கட்டணங்களை சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

ஸ்போக்கன் இங்கிலீஷ் “தவிர” ஸ்போக்கன் தமிழ்  மீது முதன்மையாக கவனம்  செலுத்த வேண்டும். அங்கன் வாடி மையங்களுக்கு ‘தாய்- குழந்தை பராமரிப்பு மையங்  கள்’ என பெயரிட வேண்டும். எம்ஜிஆர் பல்கலைக்கழ கம், அண்ணா பல்கலைக்கழ கம், தமிழ்ப் பல்கலைக்கழ கம் ஆகிய பல்கலைக்கழ கங்களில் ஆராய்ச்சி மையங் கள் அமைக்க வேண்டும். 5 வயது பூர்த்தியானவர்கள் 1ஆம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும். 11ஆம் வகுப்பு பொதுத்  தேர்வு தொடர வேண்டும்.

தமிழ் பல்கலைக்கழ கத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகள் தமிழ் ஆய்வு மற்றும் ஆரா ய்ச்சி வளர்ச்சிக்கு போதிய நிதி  ஒதுக்கீடு செய்யப்பட வேண்  டும். கிராமப்புற மற்றும் பழங்  குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற் றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

இரு பெற்றோர்களையும்  இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்பட  வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட் டத்திற்கும், ஆட்சியர் தலை மையில், 1 மனநல ஆலோச கர், சுகாதார அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவ னத்தைச் சேர்ந்த 1 உறுப்பி னர் ஆகியோரைக் கொண்ட தனிக் குழு அமைக்கலாம். தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப்  பள்ளிகள் நர்சரிகள், மழலை யர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்கா ணிப்பதற்காக ஒரு விரிவான  ஒழுங்குமுறை உருவாக் கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

;