tamilnadu

img

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் சிவாவை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் இன்று பிரச்சாரம்

விழுப்புரம், ஜூலை1- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவாவை ஆதரித்து செவ் வாயன்று (ஜூலை 2)  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

திருவண்ணாமலை- விழுப்புரம் மெயின் ரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து  கெடார் என்ற இடத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் காணை ஒன்றிய செயலாளர் பி.சிவராமன் தலைமை தாங்கு கிறார்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உயர்கல்வித்து றை அமைச்சர் க. பொன்முடி, சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி, சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், திமுக மாவட்ட அவைத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் ஜனகராஜ், விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் இரா. பெரியார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.அமீர் அப்பாஸ், காணை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி .கல்பட்டு ராஜா, சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஆ.சௌரிராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.குமரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாபுகோவிந்தராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

;