districts

img

மூன்று சட்டத் திருத்தங்களை திரும்ப பெறுக! வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சிராப்பள்ளி, ஜுலை 1- ஏற்கெனவே நடைமுறையில் இருந்த  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல்  நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சி யங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக,  பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக்  சுரக்சா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய  குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது.  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில், பல்வேறு போராட் டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் 8 ஆம் தேதி  வரை மாநிலம் தழுவிய அளவில் நீதி மன்ற பணியில் இருந்து விலகி இருப்பது  என்று முடிவு செய்துள்ளனர். மேலும் திங்க ளன்று தமிழகம் முழுவதும் வழக்கறி ஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.  திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட் டத்திற்கு திருச்சி மாவட்ட வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணி யன், செயலாளர் (ஜாக்) பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க செயலாளர் சுகுமார், துணைத்  தலைவர் மதியழகன், இணைச் செயலா ளர் சந்தோஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் மூத்த  வழக்கறிஞர்கள் வீரமணி, முத்துகிருஷ் ணன் மற்றும் குற்றவியல் வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதனால் நீதிமன்ற  பணிகள் பாதிக்கப்பட்டன. ஜூலை 2 அன்று (செவ்வாய்க்கிழமை)  நீதிமன்ற வாயில் முன்பு புதிய சட்டங் களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஜூலை  3 (புதன்கிழமை) அன்று ஒன்றிய அரசு அலு வலக வாயில் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. ஜூலை 8 (திங்கட்கிழமை)  அன்று ஒன்றிய, மாநில அரசுகளின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத் தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தஞ்சா வூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர்  தியாக.காமராஜ் தலைமை வகித்தார்.  சங்கச் செயலர் எஸ்.சுந்தர்ராஜன், தமிழ் நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பி னர் எம்.ஆர்.ஆர். சிவசுப்பிரமணியன், தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்க முன்னாள்  தலைவர்கள் கோ.அன்பரசன், எஸ். பால கிருஷ்ணன், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் திங்களன்று நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். இதேபோல், செந்துறை, ஜெயங் கொண்டம் நீதிமன்ற வழக்கறிஞர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்.ஸ்டா லின் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில், வழக்கறிஞர் சங்க செயலாளர் நெடுஞ்செழியன்,  செயற்குழு உறுப்பி னர்கள் பாலாஜி, சத்தியமூர்த்தி, ஞானப் பிரகாசம், கார்த்திகேயன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உரையாற்றினர்.

;