9 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! '
\சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ். அலுவலர்களை இடமாற் றம் செய்து தலைமைச் செய லாளர் நா. முருகானந்தம் உத் தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாத இறுதியில் மட்டும், 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐ.ஏ.எஸ் அதிகாரி கள் இடமாற்றம் செய்யப் பட்டனர். இதன் தொடர்ச்சி யாக, தற்போது மீண்டும் 9 ஐஏஎஸ் அலுவலர்களை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது.
விஜய்யை ‘தற்காலிகமாக கைவிட்ட’ பிரசாந்த் கிஷோர்!
சென்னை, ஜூலை 5- தமிழக வெற்றிக் கழகத் தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்கா லிகமாக விலகுவதாக அரசி யல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பீகார் பேரவைத் தேர் தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும், அம்மாநிலத் தேர்தல் முடிந்த பின்னர்- நவம்பருக்குப் பிறகு தவெக ஆலோசகராக மீண்டும் செயல் படுவது பற்றி முடிவெடுப் பேன் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை வெடி விபத்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு சாத்தூர்
, ஜூலை 5- சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை யில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற வெடி விபத்தில் 9 தொழிலா ளர்கள் உடல் கருகி பரி தாபமாக உயிரிழந்த நிலையில், சிகிச்சை பல னின்றி மற்றொரு தொழி லாளியும் உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ளது சின்னக்கா மன்பட்டி. இங்குள்ள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 1 அன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உட்பட தொழிலா ளர்கள் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் படு காயத்துடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த ஜூலை 2 இல் சிவகாசி அரசு மருத்து வமனையில் லிங்கசாமி (45) என்பவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். மேலும், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா(28) என்ற தொழிலாளி ஜூலை 4 இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை யடுத்து, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தி னரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சிஐ டியு உள்ளிட்ட அமைப்பு களும் கோரிக்கை விடுத் துள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.