tamilnadu

img

புரோ கபடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க 4 அணிகள் கடும் போட்டி

புரோ கபடி தொடரின் 8-வது சீசன் ரசிகர்கள் இல்லாமலே நடைபெற்று வந்தாலும் அனைத்து அணி வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் சுவாரஸ்யமாக நகர்ந்து வருகிறது. லீக் ஆட்டங்கள் பாதிக் கட்ட த்தை எட்டியுள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க தில்லி, பாட்னா, பெங்களூரு, தமிழ்நாடு ஆகிய அணிகள் கடுமையாகப் போராடி வருகின்றன. 4 போட்டிகளை  டிரா செய்த தால் தான் தமிழ்நாடுஅணி 4-வது இடத்தில்உள்ளது. அதில் வெற்றி பெற்றி ருந்தால் எந்தஅணியும் பின் தொடர முடியாத அளவிற்கு முதலிடத்தில் அமர்ந்திருக்கும்.  48-வது லீக் ஆட்டம்  முடிவில் புள்ளிப்பட்டியல் 1. பாட்னா - 34 புள்ளிகள்  2. தில்லி - 32 புள்ளிகள்  3. பெங்களூரு - 28 புள்ளிகள்  4. தமிழ்நாடு - 27 புள்ளிகள்