கரூரில் 202 தீக்கதிர் சந்தா வழங்கல்
கரூர், ஜூலை 26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டக் குழு சார்பில், தீக்கதிர் 202 சந்தாவுக்கான தொகை வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டக் குழு சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் கூட்டம், கட்சியின் மாவட்டக் குழு அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம் தலைமை வகித்தார். தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக் கத்தில் பெறப்பட்ட 202 சந்தா விற்கான தொகையை தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலா ளர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.பாலாவிடம் மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், பி.ராஜூ, கே.சக்திவேல், இரா.முத்துச் செல்வன், பி.ராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, எம்.தண்டபாணி, ஆர்.ஹோச்சுமின், கே.வி.கணேசன், எம்.ராஜேந்திரன், கெ.சக்திவேல், ஒன்றியச் செயலாளர் கள் ஜி.தர்மலிங்கம், எம்.ஆறுமுகம் இணைந்து வழங்கினர்.