tamilnadu

img

10 ஆவது மாநில மாநாடு பழனியில் வரவேற்புக்குழு அமைப்பு

10 ஆவது மாநில மாநாடு பழனியில் வரவேற்புக்குழு அமைப்பு

அக்.5-7 மலைவாழ் மக்கள் சங்க 

திண்டுக்கல், ஆக. 3- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்  10 ஆவது மாநில மாநாடு, திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அக்டோபர் 5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநில மாநாட்டின் துவக்க நாளான அக்டோபர் 5 அன்று, மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. ஆதி வாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின்  அகில இந்திய தலைவர் ஜிதேந்திர சவுத்ரி,  அகில இந்திய துணைத் தலைவர் பிருந்தா காரத், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஆர். சச்சிதானந்தம் எம்.பி. ஆகி யோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மாநாட்டிற்கான வரவேற்புக்  குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமை பழனி யில் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ.வுமான பி. டில்லிபாபு, மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மாநிலப் பொருளாளர் ஏ. பொன்னுச்சாமி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ராணி,  மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.  பெருமாள், மாவட்டச் செயலாளர் எம். ராம சாமி, பொருளாளர் தயாளன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி. வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் 101 பேர் கொண்ட வர வேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்  குழுவின் தலைவராக திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந் தம், செயலாளராக தா. அஜாய் கோஷ், பொரு ளாளராக எஸ்.கமலக்கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.