tamilnadu

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்! சென்னையில் நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்! சென்னையில் நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

சென்னை, ஜூலை 31 - ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ முகாம்கள் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறி முகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தை ஆகஸ்ட் 2 அன்று சென்னை செயிண்ட் பீட்டர்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் மருத்துவ சேவைகளை கடைக்கோடி மனி தருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இத்திட்டம் ரூ. 12.78 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தர மான மருத்துவச் சேவைகள் பொது மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில்  1,256 முகாம்கள் இதன்படி தமிழ்நாட்டின் 38 மாவட்ட ங்களில் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வட்டா ரத்திற்கு 3 முகாம்கள் என்ற அடிப்படை யில், 388 வட்டாரங்களில் மொத்தம் 1,164 முகாம்கள், சென்னை மாநக ராட்சியில் 15 முகாம்கள், 10 லட்சத்திற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் 20 முகாம்கள் மற்றும் 10 லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநக ராட்சிகளில் 57 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை தேர்ந்தெடு க்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.  குடிசைப் பகுதிகளுக்கு முன்னுரிமை சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், மனநல பாதிப்புடையவர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந் தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்கு டியினர் மற்றும் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் இந்த முகாம்களில், ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்த மாதிரிகள் சேகரித்து முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த  சர்க்கரை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோ தனைகள் செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக உட னடியாக தெரிவிக்கப்படும். கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண் களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படும். 16 சிறப்பு மருத்துவ சேவைகள் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்து வம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரை யீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மரு த்துவம், கதிரியக்கவியல் மருத்துவம் ஆகிய 16 சிறப்பு மருத்துவ பிரிவுகளில் சேவை வழங்கப்படும். இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்படும். மருத்துவக் காப்பீட்டு அட்டைப் பதிவு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு  செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல் ஆகியவையும் முகாமி லேயே நடைபெறும். நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை (HMIS 3.0) வாயிலாக விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் இம்முகாம்களில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ‘உங்களு டன் ஸ்டாலின்’ முகாம்களில் முதல் கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட வர்கள் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.