tamilnadu

img

இந்தியாவில் வேலையின்மையால் தினமும் 36 பேர் தற்கொலை... தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தகவல்

புதுதில்லி:
இந்தியாவில், 2018- ஆம் ஆண்டில் நடந்த தற்கொலைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(National crime records bureau- NCRB)வெளியிட்டுள்ளது. அதில், 2018 ஆம் ஆண்டில், வேலையின்மை காரணமாக, சராசரியாக நாளொன்றுக்கு 35 இளைஞர்களும், சுயதொழில் செய்பவர்கள் 36 பேரும் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

நாட்டில், 2018-இல் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவர்களில் வேலையின்மை, தொழில் பிரச்சனை காரணமாக மட்டும் 26 ஆயிரத்து 85 பேர் தற்கொலைசெய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள் ளது. இதுதொடர்பாக என்சிஆர்பி அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:ஒட்டுமொத்தமாக, 2018 ஆம் ஆண்டில் நாட்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2017 உடன்ஒப்பிடும்போது இது 3.6 சதவிகிதம் அதிகம்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் பெண்கள் 42 ஆயிரத்து 391 (17.1 சதவிகிதம்) பேர். இவர்களில் இல்லத்தரசிகள் மட்டும் 22 ஆயிரத்து 937 (54.1 சதவிகிதம்) பேர் ஆவர்.

இதேபோல அரசு ஊழியர்கள் ஆயிரத்து707 பேர் (1.3 சதவிகிதம்), தனியார் துறைநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் 8 ஆயிரத்து 246 பேர் (6.1 சதவிகிதம்), பொதுத்துறைநிறுவனங்களின் ஊழியர்கள் 2 ஆயிரத்து 22 பேர் (1.5 சதவிகிதம்), மாணவர்கள் 10 ஆயிரத்து 159 பேர் (7.6 சதவிகிதம்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப் பட்டவர்கள் 12 ஆயிரத்து 936 பேரும் (9.6 சதவிகிதம்). சுயதொழில் செய்யும் பிரிவினர்13 ஆயிரத்து 149 பேரும் (9.8 சதவிகிதம்) தற்கொலை செய்துள்ளனர். வேளாண்துறையைப் பொறுத்தவரை, 5 ஆயிரத்து 763 விவசாயிகளும், 4 ஆயிரத்து 586 விவசாயத் தொழிலாளர்களுமாக மொத்தம் 10 ஆயிரத்து 349 பேர் (7.7 சதவிகிதம்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேளாண்துறை தற்கொலைகளில் 306 பேர் பெண்களும் அடங்கியுள்ளனர்.

மாநிலங்கள் அளவில் பார்த்தால், மகாராஷ்டிரா மாநிலம் ஒட்டுமொத்த தற்கொலைகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்கு,17 ஆயிரத்து 972 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் தமிழகம்உள்ளது. 13 ஆயிரத்து 896 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 13 ஆயிரத்து 255, மத்தியப் பிரதேசத்தில் 11 ஆயிரத்து 775, கர்நாடகாவில் 11 ஆயிரத்து 561 எனவும் தற்கொலைகள் பதிவாகியுள்ளன.நாட்டில் பதிவான மொத்த தற் கொலைகளில், இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் 50.9 சதவிகித தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.இவ்வாறு என்சிஆர்பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;