தில்லி
தான் பிரதமர் ஆன காலத்திலிருந்து நரேந்திர மோடி பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பதற்காக "மான் கி பாத்" எனப்படும் வானொலி நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் தானாக குறிப்பெடுத்து தானாக மோடி பேசுவார். சில சமயங்களில் யாருடனாவது உரையாற்றுவார்.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான மான் கி பாத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நீட், ஜே.இ.இ தேர்வுகள், பள்ளி கல்லூரிகள் திறப்பு பற்றி எதுவும் பேசாமல் தஞ்சாவூர் பொம்மை, ராஜபாளையம் வேட்டை நாய் போன்றவற்றை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விமரசனம் செய்த நிலையில், நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வழக்கம் போல வீடியோவாக பதிவேற்றியது. இந்த வீடியோவை 5.54 லட்சம் (இந்த புள்ளிவிபரம் இன்று காலை நிலவரப்படி) வெறுத்து டிஸ்லைக் செய்துள்ளனர். வெறும் 80 பேர் மட்டுமே விரும்பியுள்ளனர். தேவையானவற்றை பற்றி பேசமால் பொம்மைகள் மற்றும் நாய்கள் பற்றி பேசும் மோடியை அந்த பக்கத்தில் சிலர் ஆவேசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள 90 சதவீத மக்கள் சமூக வலைத்தளம் மற்றும் யூடியூப் தளத்தில் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியை கண்டுகொள்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.