tamilnadu

img

“பதற்றம் இல்லை”

சீயோல்
“பதற்றம் இல்லை”

எல்லைப்பகுதியில் வட கொரியா எந்தவிதமான சந் தேகப்படும்படியான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று தென்கொரியா கூறியுள்ளது. முன்னதாக வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று மேற் கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டியி ருந்தன. அதை தென்கொரியாவே மறுத் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ டி ஜெனிரோ
கருப்பின போராட்டம்

அமெரிக்காவைப் போலவே பிரேசிலிலும் கருப்பின மக்களின் எழுச்சிமிகு போராட்டம் வெடித்துள்ளது. ரபேலா மட்டோஸ் என்ற 14 வயது கருப்பின சிறுமி போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆவேசப் போராட்டம் துவங்கியுள்ளது. இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் பிரேசில் முழுவதும் கருப்பினத்தைச் சேர்ந்த அல்லது கலப்பினத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஒடுக்கு முறையால் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங்
பாதிப்பு குறைகிறது

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதனன்று 31 என்ற எண்ணிக் கையில் இருந்தது, வியாழனன்று 21 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. பெய்ஜிங் முழுவதும் தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அதிதீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாவது தொற்று அலை எனக்கூறப்படும் பெய்ஜிங் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 158 பேருக்கு உறுதி செய் யப்பட்டுள்ளது. அவர்கள் அனை வரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்டர்டாம் 
காந்தி சிலை சேதம்

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் அமைந் துள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சிலர் தேசப்படுத்தியுள்ளனர். அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை தொ டர்ந்து, உலகின் பல பகுதிகளில், ஒடுக் கப்பட்ட மக்களுக்கு எதிரான வர்களின் சிலைகளை சிலர் உடைத்து வருகின்றனர். அதற்கு பதிலடி என்ற பெயரில், கருப்பின மக்க ளுக்காக போராடிய தலைவர்களில் சிலர்களையும் வலதுசாரி சக்திகள் குறி வைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இந்த பின்னணியிலேயே நெதர் லாந்தில் உள்ள காந்தி சிலை மீது பெயிண்ட்டை ஊற்றியும், நோட்டீஸ்க ளை ஒட்டியும், மர்ம நபர்கள் சேதப் படுத்தியுள்ளனர். 

வாஷிங்டன்
சிரியா மீது மேலும் தடை

சிரியா மீது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தடைகளை விதித்து கொடிய யுத்தத்தை ஏவிய அமெரிக்கா, தடைக ளின் அடுத்தகட்டமாக சிரியா ஜனாதி பதி பஷார் அல் அசாத் மற்றும் அவரது மனைவி அஷ்மா ஆகியோர் மீது சீஷர் சிரியா பாதுகாப்பு தடைச்சட்டம் என்ற பெயரிலான அமெரிக்க சட்டத் தின் கீழ் புதிய தடைகளை விதித்துள் ளது. அசாத்தின் மனைவி அஷ்மா மீது அமெரிக்கா தடை விதித்திருப்பது இதுவே முதல் முறையாகும். சிரியா வில் அசாத் அரசு அகற்றப்படும் வரை அவர் மீதும் அவரது அரசின் மீதும் தடைகள் தொடரும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாம்பியோ கூறியுள்ளார். அஷ்மா மட்டுமின்றி சிரியாவின் 39 முக்கிய பிரமுகர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள் ளது.


 

 

 


 

;