tamilnadu

img

என்னிடம் ஆலோசித்தே வேட்பாளர்கள் அறிவிப்பு....

பெங்களூரு:
மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க் களின் பதவிக் காலம் இந்தமாதத்துடன் நிறைவடைவதால், அந்த 4 இடங்களுக்கு ஜூன் 19-இல் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட, முதல்வர் எடியூரப்பா ஆலோசனையின் பேரில்,எம்எல்ஏ உமேஷ் கட்டி-யின்சகோதரர் ரமேஷ்கட்டி, பிரபாகர்கோரே, பிரகாஷ் ஷெட்டி ஆகியோரின் பெயர்கள் பாஜக-வின்தில்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ஆனால், அந்த பெயர்களைநிராகரித்துவிட்ட தில்லி தலைமை, பெரிய அளவிற்கு அறிமுகம் இல்லாத அசோக் கஸ்தி, எரன்னா கடாடி ஆகியோரின் பெயரை அறிவித்தது. அதாவது, முதல்வர் எடியூரப்பாவின் பரிந்துரையை பாஜக தலைமைபுறக்கணித்து இருப்பதாகவும், பாஜகவில் எடியூரப்பாவுக்கு செல்வாக்கு முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.இதனால் பதறிப்போன எடியூரப்பா, அவசர அவசரமாக ஊடகங்கள் முன்பு பேட்டி அளித்துள்ளார். அதில், “எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வேறு சில பெயர்களை பரிந்துரைத்து இருந்தது உண்மைதான்.. எனினும், என்னுடன் விவாதித்துத் தான் புதிய வேட்பாளர்களை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாஅறிவித்தார்” என்று சமாளித் துள்ளார்.