tamilnadu

img

காவல்துறை தலைமை இயக்குநருடன் இன்று ஊடக கண்காணிப்புக்குழுவினர் சந்திப்பு....

சென்னை:
கருத்துச் சுதந்திரம், நடுநிலை செயல்பாடு, ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஊடக கண்காணிப்புக்குழு திங்களன்று தமிர்நாடு காவல்துறை தலைமை இயக்குநரை சந்திக்க முடிவு செய்துள்ளது.ஊடக கண்காணிப்புக்குழுவின் முதல்காணொலி கலந்தாய்வுக்கூட்டம் வெள்ளியன்று பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதன்  விபரம்  வருமாறு:-

கடந்த 27.07.2020ல்நடைபெற்ற தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கருத்துசுதந்திரத்தைக் காக்கும்பொருட்டும் அச்சுமற்றும் காட்சி ஊடகங்களில் அரசியல்நடுநிலைமையைக்  கண்காணித்திடவும், ஆண்- பெண்இருபால் ஊடகவிய லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,தமிழகத்தின்    பெரும்பாலான  இளைஞர்களின் கருத்துப் பரிமாற்றக் கருவியான சமூக ஊடகத்தில்  ஆக்கப்பூர்மாககருத்து பதிவிடும் இளைஞர்ககளுக்கு  ஏற்படும்மிரட்டல்களை, இன்னல்களைத் தவிர்க்கும்பொருட்டும் அமைக்கப்பட்ட ஊடகக் கண்காணிப்புக் குழுவின்முதல் காணொலிக் கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன் டைன்ரவீந்திரன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.இந்தக்  கூட்டத்தில்,க.கனகராஜ், வழக்கறிஞர் அருள்மொழி  கோபண்ணா, மல்லை சத்யா,சி.மகேந்திரன், ரவிக்குமார்  எம்.பி., அப்துல்ரஹ்மான், அப்துல் சமது, சூர்யமூர்த்தி,  ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில்எடுக்கப்பட்ட முடிவுகள்வருமாறு:-பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தனிநபர் தாக்குதலைத் தொடுக்கும் சமூக விரோதிகள்மீது   கொடுக்கப்பட்டுள்ள புகார்களில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை மாறாக, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மத்திய,   மாநில ஆளுங்கட்சிகளின் பின்புலத்தோடு  யாரேனும் புகார் கொடுத்தால் உடனடியாக  நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.  இந்தபாரபட்சப் போக்கைகைவிட வேண்டும்.

பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்கள் மீதான தனிநபர் தாக்குதலும்,    தரம்கெட்ட, ஆபாசமான விமர்சனங்களையும்  ஆளுங்கட்சிகளுக்கு வேண்டியகூட்டம்   தொடர்ந்துசெய்து கொண்டே இருப்பதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்காமல்,    உடனடியாகநடவடிக்கை எடுத்திடல்வேண்டும்.

சமூக அக்கறை இளைஞர்கள் மீது தனிநபர் தாக்குதல்கள்!
தமிழகத்தில் அரசியல்மயப்படாத ஆனால் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட இளைஞர்கள், சமூக ஊடகங்கள் வழியாக நியாயமான தங்கள்உரிமைக்கான குரலைப்பதி விடுகிறபோது அவர்கள் தனிநபர் தாக்குதல் களுக்கு உள்ளாகிறார்கள்.குறிப்பாக,  இளம்பெண்கள்  தரக்குறைவாக, ஆபாசமாக விமர்சிக்கப்படுவதோடு மிரட்டலுக்கும் ஆளாகிறார்கள். இந்த மாதிரியான சமூகவிரோதிகளின் மீதுபுகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.இதைத்   தவிர்த்து, துரிமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்கள்,சமூக ஊடகங்களில்  சமூக  அக்கறையோடு செயல்படுகின்ற ஒவ்வொருவருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளித்திடல் வேண்டும். இந்த மூன்றுமுக்கிய காரணங்களுக்காக தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநரைநேரில் சந்தித்து 3.08.2020 திங்களன்று மனுக்கொடுப்பது  என்று  தீர்மானிக்கப்பட்டது.

சம அளவிலான பங்கேற்பாளர், சம அளவு வாய்ப்பு
அதோடு,  ஜனநாயகத்தின்  ஆணிவேரான கருத்துச் சுதந்திரத்தைப்  பாதுகாத்திடும் வகையில் பத்திரிகைகள் மற்றும்  ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் விவாதங்களில் நடுநிலைத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக  செய்திகளில் எதிர்க்கட்சிகளின் செய்திகள் இருட்டடிப்புசெய்வது தவிர்க்கப்படவேண்டும். விவாதங்களில்  சம அளவிலான பங்கேற்பாளர்களைஇடம்    பெறச்செய்யவேண்டும்.அனைவருக்கும் சமமான அளவில் வாய்ப்புகள்    வழங்கப்படல்வேண்டும் மற்றும் விவாத தலைப்பிற்கு   சம்பந்தமில்லாதவர்களை தவிர்க்க வேண்டும். வலதுசாரி சிந்தனையாளர்  என்று ஒரு பட்டியல் இருப்பதுபோன்றுன்று திராவிட (அல்லது)   இடதுசாரி சிந்தனையாளர் என்று பங்கேற்பாளர்கள் பட்டியல்உருவாக்கி, சமத்துவத்தை நிலை நிறுத்திடவேண்டும் என்பதையெல்லாம்  வலியுறுத்தி ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தனித்தனியாக கடிதங்களை நேரில்சந்தித்து கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.

வல்லாதிக்கத்துக்கு கண்டனம்
இறுதியாக, தமிழகத்தில் பத்திரிகை மற்றும்தொலைக்காட்சி ஊடகத்தை சார்ந்தவர்களே  பத்திரிகை ஜனநாயகத்தைக் காப்பதற்கென்று ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை தமிழக பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீது நேர்முகமாகவோ மறைமுகமாகவோ மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசின் ஆதரவாளர்கள் வல்லாதிக்கம் செலுத்துவதன்  மூலம் ஏற்படுத்தி  இருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.