tamilnadu

img

அயோத்தியில் துவங்கப்படும் ஏர்போர்ட், சொகுசு விடுதிகள்!

அயோத்தி:
உச்ச நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டிற்குள் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும்என்று இந்து அமைப்புக்கள் கூறிவரும் நிலையில், அயோத்திக்கு வரும் பக்தர்களுக்காக, புதிதாக விமான நிலையம், 5 நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அயோத்தி கோட்டதகவல் பிரிவு துணை இயக்குநர் முரளிதர் சிங் கூறியிருப்பதாவது:அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாக அமையும் என்பதால், இதனை முன்னிட்டு, அயோத்தியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.முதற்கட்டமாக மின்னல் வேகத்தில்சர்வதேச விமான நிலையம் கட்டப்படும். அதன்மூலம், அடுத்த ஆண்டுஏப்ரல் மாதம் ராமநவமி கொண் டாட்டத்தின்போது, முதலாவது விமானம் புறப்பட வழி பிறக்கும்.அயோத்தி ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அயோத்தியில் சர்வதேச பேருந்து முனையம் உருவாக்கப்படும். பைசாபாத் - அயோத்தி இடையே 5 கி.மீ. நீளத்துக்கு பிரம்மாண்ட பாலம் கட்டப் படும்.அயோத்தியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலும், 10 சொகுசு தங்கும் விடுதிகளும் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கப்படும். ராமர் கோவில் சம்பந்தப்பட்ட குளங்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.அயோத்தியில் உள்ள சரயூ ஆற்றில் உல்லாசப் படகுப் போக்குவரத்து தொடங்கப்படும். மொத்தத்தில் திருப்பதி நகரம் போன்று அயோத்தி மாற்றப்படும் என்று முரளிதர் சிங் கூறியுள்ளார்.

;