tamilnadu

img

கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றம்...இந்தியாவிலே முதலிடம் பிடித்த சென்னை 

சென்னை:
அமில மழை பெய்வதற்கு காரணமான கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றத்தில் இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளதாக  சர்வதேச கந்தக டை ஆக்ஸைடு பாதிப்பு குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.நிலக்கரி எரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியாகும் புகை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டாலும், சென்னையைப் பொறுத்தவரை வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையம் காரணமாக கந்தக டை ஆக்ஸைடு அதிக அளவில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 751 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 648 புள்ளிகளுடன் ஒடிசா  இரண்டாம் இடத்திலும் உள்ளன. கந்தக டை ஆக்சைடு வெளியாகும் இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்திலும், உலக அளவில் 29 ஆம் இடத்திலும் உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.