tamilnadu

img

இந்தியாவில் 9 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி உள்ளது. 
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள தகவலின்படி நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில்  28,498பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.   இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,06,752 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 23,727 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,71,460 பேர்  கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் .
இந்நைலயில் மகாராஷ்டிராவில் 2,60,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ஆக உயர்வுந்துள்ளது.  உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,482ஆக அதிகரித்து உள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.