tamilnadu

img

ஆட்டோ மொபைல், பிஸ்கட் தொழிற்துறையினர் ஏமாற்றம்

புதுதில்லி:
37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று கோவாவில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, ஆட்டோமொபைல், பிஸ்கட் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்றுஅத்துறையினர் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். வாகனங்களுக்கு தற்போது 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனை 18 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என்பது ஆட்டோ மொபைல்துறையினரின் கோரிக்கையாக இருந்தது.பிஸ்கட்டுகளுக்கு ஆரம்பத்தில் 21 முதல் 23 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. பின்னர் அது 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. ஆனால், குழந்தைகளின் உணவுப்பொருளாக இருக்கும் பிஸ்கட்டுகளுக்கான வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கைஎழுந்தது. ஆடம்பரப் பொருளாக கருதப்படும் தங்கத்திற்கு 3 சதவிகிதம் மட்டுமே வரி நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை பிஸ்கட் தொழிற்துறையினர் சுட்டிக் காட்டியிருந்தனர்.ஆனால், வெள்ளியன்று நடை பெற்ற கூட்டத்தில், 20 பொருட்கள் மற்றும் 12 சேவைகள் மீதான ஜிஎஸ்டிவரியை மாற்றியமைத்த ஜிஎஸ்டி கவுன்சில், ஆட்டோ மொபைல், பிஸ்கட்தொழில்கள் மீதான வரி குறைப்பு குறித்து, எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. இதனால், ஆட்டோ மொபைல் மற்றும் பிஸ்கட் தொழிற் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

;