tamilnadu

img

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்தியா கூட்டணி ஆதரவு

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்தியா கூட்டணி ஆதரவு

புதுச்சேரி, ஜூலை 7 -  புதுச்சேரியில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடை பெற்றது. சிபிஐ மாநில செயலாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, திமுக மாநில அமைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சிபிஎம் மாநில செய லாளர் எஸ்.ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்பி கூறியதாவது: “இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் காலத்தில் வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைத்து, ஒன்றிய அரசுக்கு ஆதரவு தந்தோம்.தாக்குதல் நிறுத்தத்துக்கு பிறகு ஒன்றிய அரசு தொழிற்சங்கங்களை அழைத்து பேச வில்லை. அதனால் கண்டிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” “போராட்ட அடிப்படை காரணங்களை அறிந்து பேச்சுவார்த்தைக்கு கூட மாநில அரசு அழைக்கவில்லை. நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்டம் நடத்துகின்றன. புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ஆதரவு தந்து முழு பந்த் நடத்துகிறோம். ஒப்பந்த பணிகளில் பல்வேறு துறைகளில் பணி புரிவோர் ஊதியம் சரியான முறையில் தரப்படாதது உள்ளிட்ட விஷயங்களையும் வலியுறுத்துகிறோம்.” “பள்ளி, கல்லூரிகள் ஒத்துழைப்பு தரவும் கோரியுள்ளோம். தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் செய்து முழு அடைப்புக்கு ஆதரவு தரகோரியும். புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. தொழிலாளர் குரல் ஒலிக்க விடாத ஒன்றிய அரசின் ஆட்சியும், அதன் நிழல் ஆட்சியும் நடக்கிறது.” காலை 6 முதல் மாலை 6 வரை பந்த் நடக்கும். பஸ், ஆட்டோ, டெம்போ, அரசு பள்ளி, கல்லூரி பேருந்துகள் இயங்காது. வரும் 2026ல் மத்திய தலைமை, மாநில தலைமை பேசி புதுச்சேரி தலைமை பற்றி முடிவு செய்வார்கள் என்று அவர் தெரி வித்தார்.