tamilnadu

img

தீக்கதிர் மதுரை மண்டலச் செய்திகள்

மதுரை மாவட்ட சத்துணவு  மையங்களில் வேலை வாய்ப்பு

மதுரை:
மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 358அமைப்பாளர்கள், 71 சமையலர்கள், 559 சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண் ணப்பிக்க இறுதி நாள் 5-10-2020 மாலை 5.45 மணி. விண்ணப்பப் படிவங்கள் ஊராட்சி ஒன்றியங்கள், மதுரை மாநகராட்சி, திருமங்கலம் நகராட்சியில் இலவசமாக வழங்கப்படும். மதுரை மாவட்ட இணையதளமான www.mdu.nic.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நேரடிநியமன நடவடிக்கை அனைத்தும் மதுரைமாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்டது.விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்று, மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டவர் அல்லது விதவை எனில் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று (அனைத்தும் நகல்கள் மட்டுமே இணைக்க வேண்டும்).இந்தத் தகவலை மதுரை ஆட்சியர்டி.ஜி.வினய் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

                         ***************

காலமானார்

இராமநாதபுரம்:
இராமேஸ்வரம் தீட்சிதர் கொல்லைதெருவில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்என்.பாலசுப்பிரமணியன் சனிக்கிழமைகாலமானார் காலமான பாலசுப்பிரமணியன் வாலிபர் சங்க தாலுகா துணத் தலைவர் பா.சங்கரின் தந்தையாவார். பாலசுப்பிரமணியன் இறுதி நிகழ்ச்சிகள் ஞாயிறன்று இராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது. 
காலமானார் 
தேனி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.புதுப்பட்டி முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் ஆர்.முருகேசன் காலமானார்.கட்சியின் கிளைச் செயலாளராக திறம்பட பணியாற்றி, விவசாயிகள் சங்கத்தின் ஏரியாக்குழு உறுப்பினராக திறம்பட பணியாற்றிய முருகேசன் உடல் நலக்குறைவு காரணமான வியாழனன்று காலமானார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் ஆவார். அன்னாரது மறைவு செய்தியறிந்த தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.அண்ணாமலை, ஏரியாசெயலாளர் ஜி.எம்.நாகராஜன், சிஐடியுதலைவர் பி.முருகேசன் ,தெய்வேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முருகேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

                         ***************

பேரிடர் கால ஒத்திகை

திருவில்லிபுத்தூர்:
பேரிடர் காலங்களில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை துரிதமாக செயல்பட்டு மீட்பது எப்படி தீப்பிடித்தால் தீயை அனைத்து தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வுதிருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத் தில் நடைபெற்றது. தீயணைப்பு நிலையஅலுவலர் குருசாமி, வட்டாட்சியர் சரவணன் தலைமை வகித்தார், முன்னாள் வருவாய் ஆய்வாளர் பால்துரை, துணை வட்டாட்சியர்கள், அலுவலர்கள் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.'