tamilnadu

img

பீகாரில் பாஜக - ஜேடியு மோதல் முற்றுகிறது...

பாட்னா:
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், அங்குகடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தலைநகரான பாட்னாவே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.இதனிடையே, ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக-வுக்கும், ஐக்கிய ஜனதாதளத்திற்கும் சமீப காலமாகநடந்துவரும் பனிப்போர், தற்போதைய வெள்ளப் பாதிப்பிலும் வெடிக்கத் துவங்கியுள்ளது.முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாததே, பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் என்று பாஜக-வினர் குற்றம்சாட்டத் துவங்கியுள்ளனர்.பீகாரின் பெகுசராய் தொகுதி பாஜக எம்.பி. கிரிராஜ் சிங்,இதனை வெளிப்படையாகவே கூறியுள்ளார். “வெள்ளத் துயரத்திற்கு பாட்னாவில் வசிக்கும் மக்கள்காரணமில்லை. எங்கள் கூட்டணி மீது, குறிப்பாக பாஜகமீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால்,ஆளும் கட்சி (ஐக்கிய ஜனதாதளம்) சரியான நடவடிக்கைஎடுக்காததால், எங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. இதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

;