tamilnadu

img

மோடி ஆட்சியால் நெருக்கடியில் தள்ளப்பட்ட சிறு, குறு தொழில்களை மீட்போம்!

கோவை மாவட்டத்தில் சுமார் 3000 பம்ப் உற்பத்தி செய்யும் சிறு, குறுநிறுவனங்கள் உள்ளன. மேலும் 300 வார்ப்பகங்களும், 200 கிரைண்டர் நிறுவனங்களும், 30,000 சிறு குறு லேத் (கடைசல்) பட்டறைகளும் உள்ளன. (ஒவ்வொரு யூனிட்டிலும் சுமார்10 லேத் இயந்திரங்கள் இருக்கும்) மற்றும் இம்மாவட்டத்தில் கணினிமயமான (ஊசூஊ) லேத்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இத்தகைய நிறுவனங்கள் அனைத்தும் தற்போது கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன.3000 பம்ப் நிறுவனங்களும் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளன. நெருக்கடி காரணமாக சி.என்.சி சிறு, குறு நிறுவனங்கள் ஒருபகுதி மூடப்பட்டுவிட்டன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட பம்ப் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீண்டு எழுந்து நிற்க முயற்சித்தபோது, அடுத்த தாக்குதலாக ஜிஎஸ்டி வரி சட்டம் இந்த நிறுவனங்களைக் கடுமையாக பாதித்துள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 30 சதவிகித சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.


பாதிக்கப்பட்ட உரிமையாளரின் துயரம்


நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தனது சிறு நிறுவனத்தை மூடிவிட்டு குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படும் ஒருவரைச் சந்தித்தேன். தற்போது 60 வயதுடைய இவர் 1995 ஆம் ஆண்டு கோவை சிங்காநல்லூரில் சின்ன பம்ப் நிறுவனத்தை துவக்கினார். இதில் 12 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். 1/2 ழஞ மோட்டாரில் இருந்து 10 ழஞ வரையிலான மோட்டார்உற்பத்தி செய்து வந்தார். தொழிலில் நல்ல லாபம் கிடைத்து தொழில்கூடத்தோடு சேர்ந்துநான்கு அறைகளைக் கொண்ட கட்டிடத்தைக்கட்டினார். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்த பிறகு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமலும், மூலப்பொருட்கள் வாங்க முடியாமலும் நிறுவனம் நொடித்தது. நல்ல காலம்வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஜிஎஸ்டிவந்த பிறகு நம்பிக்கை இழந்து தொழிலைக் கைவிட்டு இயந்திரங்களை விற்று விட்டார்.தற்போது தொழிலால் சம்பாதித்து கட்டிய கட்டிடத்தில் நான்கு அறைகளையும் வாடகைக்கு விட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார். வாடகை மூலம் வரும் வருவாய் போதாது என்ற நிலையில், இன்று ஒரு வேலை; நாளை ஒரு வேலை என்று நிரந்தரமில்லாத சிறு சிறு வேலைகள் செய்து சம்பாத்தியம் ஈட்டுகிறார். இவருக்கு மனைவிமற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் கல்லூரியில் படித்து வருகிறார். இன்னொரு மகன் பெங்களூரில் சிறு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.தன்னுடைய துயரத்தை என்னிடம் பகிர்ந்து கொண்ட அவர் தன்னுடைய பெயரையும், முகவரியையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். வாழ்க்கை நொடிந்த நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் உணர்வு இவரிடம் பிரதிபலித்தது. ஆனால் உறுதியாக ஒன்று சொன்னார். ஜிஎஸ்டி வரியைக் குறைத்து தொழில் நடத்துவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டால் மீண்டும் பம்ப்ஸ் நிறுவனத்தை துவக்குவேன் என்றார்.மோடி அரசின் ஐந்தாண்டு ஆட்சியில் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் துறையினரில், “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான்!” இவரது அனுபவம்.


பம்ப் தொழில் படும்பாடு


ஜிஎஸ்டி வரிச் சட்டம் வருவதற்கு முன்பாகரூ.1.5 கோடிக்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கம்பெனிகளுக்கு கலால் வரிவிலக்கு இருந்தது. தற்போது 40 லட்சம்ரூபாய் வரையில் வரி விலக்கு உள்ளது என்று ஜிஎஸ்டி சட்டம் கூறினாலும் இதரகம்பெனிகளோடு பரிவர்த்தனை செய்கின்றபோது சிறு, குறு நிறுவனங்கள் அனைத்தும் ஜிஎஸ்டிக்குள் வந்துவிடுகின்றன. ஜிஎஸ்டிக்கு முன்பு பம்ப்ஸ் நிறுவனங்கள் வாங்குகின்ற உதிரி பாகங்களுக்கு 5 சதவிகித வாட் வரி கட்ட வேண்டும்.பம்ப்ஸ் விற்பனை செய்கின்றபோது 5சதவிகித விற்பனை வரி செலுத்த வேண்டும்.அதே நேரத்தில் நடுத்தர மற்றும் பெரிய கம்பெனிகள் 12.5 சதவிகித கலால் வரியும்,உதிரிபாகங்கள் வாங்குவதற்கு 5 சதவிகிதவரியும், விற்பனைக்கு 5 சதவிகித வரியும்கட்டி வந்தார்கள். சிறு, குறு கம்பெனிகளுக்கும் நடுத்தர கம்பெனிகளுக்கும் வித்தியாசமான வரிவிதிப்பு இருந்தது. இதனால் சிறு குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு குறைவு. பம்ப்ஸ் விற்பனை விலையிலும் சிறு,குறு கம்பெனிகளுக்கும், பெரிய நடுத்தர கம்பெனிகளுக்கும் வித்தியாசம் இருந்தது.


சிறு குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பம்ப்ஸ் விலை


 1/2 HP பம்ப்ஸ் விலை ரூ.1500


 5 HP பம்ப்ஸ் விலை ரூ.15,000

 நடுத்தர மற்றும் பெரிய கம்பெனிகள் உற்பத்தி செய்யும் பம்ப்ஸ் விலை


1/2 HP பம்ப்ஸ் விலை ரூ. 2500


5 HP பம்ப்ஸ் விலை ரூ. 22,000


இரு பிரிவுகளுக்கும் இடையே 1/2 ழஞ பம்ப் ஒன்றுக்கு ரூபாய் 1000மும், 5 ழஞபம்ப் ஒன்றுக்கு 7000மும் விலை வித்தியாசம் இருந்தது. இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் சிறு, குறு கம்பெனிகள் உற்பத்தி செய்யும்பம்ப்ஸ்களை வாங்கினார்கள். தற்போது சிறு,குறு பம்ப்ஸ் கம்பெனிகளுக்கும், நடுத்தர மற்றும் பெரிய கம்பெனிகளும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வித்தியாசம் இல்லை. ஒரே விதமான வரி விகிதம்தான். இதனால் சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பம்ப்ஸ் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நடுத்தர, பெரிய நிறுவனங்களைப் போலவே சிறு குறு பம்ப்ஸ் கம்பெனிகள் உதிரிபாகங்கள் வாங்கும்போது 18 சதவீதம் ஜிஎஸ்டிகட்ட வேண்டும். விற்பனையில் 12 சதவீதம்ஜிஎஸ்டி வரி கிடைக்கும். இதில் மட்டும் சிறு குறுகம்பெனிகளுக்கு 6 சதவீதம் நட்டம் ஏற்படுகிறது. 



வார்ப்பட தொழில்கள்  


கோவை மாவட்டத்தில் சுமார் 300 சிறு, குறு வார்ப்பட நிறுவனங்கள் உள்ளன. ஜிஎஸ்டி சட்டத்திற்கு முன்பு ரூ.1.5 கோடி வரைவருமானம் உள்ள கம்பெனிகளுக்கு கலால்வரி இல்லை. வேலை முடித்து விற்பனை செய்தால் வாட் வரி (ஏஹகூ) 5 சதவீதம் கட்டவேண்டும். தற்போது ஜிஎஸ்டி வரி 18சதவீதம்.முன்பு பெரிய கம்பெனிகள் கலால் வரிசெலுத்துவதோடு வாட் வரியும் செலுத்தினார்கள். தற்போது சிறு குறு கம்பெனிகளுக்கும், பெரிய கம்பெனிகளுக்கும் வரி விதிப்பில் வித்தியாசம் இல்லாததால் சிறு குறு கம்பெனிகள் பாதிக்கப்படுகின்றன.சிறு, குறு வார்ப்பகக் கம்பெனிகளுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். வரிக்கான வருமான வரம்பை ரூபாய் 2 கோடியாக உயர்த்த வேண்டும். மேலும் வார்ப்பகங்களை மின்மயமாக்கிட தற்போதுள்ள 112 கிலோ வாட்டில் இருந்து 175 கிலோ வாட்டுக்கு மாற்ற வேண்டும்.


கிரைண்டர் நிறுவனங்கள் 


கோவை மாவட்டத்தில் சுமார் 200 சிறுகுறு கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் குறைத்தால் தான்இந்தநிறுவனங்களையும் இவைகளுக்கு உதிரிபாகம் தயார் செய்யும் 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் பாதுகாக்க முடியும்


சிறு,குறு நிறுவனங்களின் பங்கு


6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை சிறு குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. தமிழகத்தின் உற்பத்தியில் 45 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் சிறு,குறு நிறுவனங்களின் பங்களிப்பாக உள்ளதுஎன அரசின் அறிக்கையே கூறுகிறது.இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டிவரிச்சட்டம் ஆகியவற்றால் கோவை மாவட்டம் மட்டுமல்ல, நாடு முழுவதும் சிறுகுறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக மாநிலஅரசே ஒப்புக்கொண்டுள்ளது.


சிறு,குறு நிறுவனங்களைப் பாதுகாத்திட


பம்ப்ஸ், கிரைண்டர், வார்ப்பட தொழில், ஜாப் ஆர்டர் தொழில்கள் உள்ளிட்ட இன்ஜினியரிங் தொழில்கள், விசைத்தறி உள்ளிட்ட சிறு குறு தொழில்களை புனரமைத்திட, பாதுகாத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க முடியும். இத்தகைய மாற்றத்தை உருவாக்கிட மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை.







;