tamilnadu

img

ஊரடங்கை நீட்டிப்பது புத்திசாலித்தனமா? ஏழைகளுக்கு உணவளிக்க ரூ.65 ஆயிரம் கோடி தேவை ரிசர்வ் வங்கி முன்னாள்  ஆளுநர் ரகுராம் ராஜன் தகவல்

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பிரச்சனையால் தவிக்கும் மக்களுக்கு ஏழைகளுக்கு உதவ உடனடியாக ரூ.65ஆயிரம் கோடி தேவை. உள்நாட்டு உற்பத்தியைக் கருத்தில் கொண்டு அதைச் செய்ய முடியும்.
ஊரடங்கை நீட்டிப்பதில் புத்திசாலித்தனம் தேவை. ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்காமல் பொருளாதாரத்தை படிப்படியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான வழியைத் தேட வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ராகுல் காந்தியுடனான வீடியோ உரையாடலில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு, தீர்வுகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி  ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் இருபது நிமிடங்களுக்கும் மேலாக ராகுல் காந்தி காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது ரகுராம் ராஜன் பகிர்ந்து கொண்டதாவது:-

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பை இழந்து, வருமானமில்லால் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க உடனடியாக ரூ.65 ஆயிரம் கோடி தேவை.
என்னைப் பொறுத்தவரை மூன்றாவது அல்லது  நான்காவது முறையாக ஊரடங்கு வந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும். மக்கள் அரசின் வேலைவாய்ப்புகளை மட்டும் நம்பியிருக்காமல் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். இந்தியாவின் உள்நாட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு ரூ. 200 லட்சம் கோடி. இதில் ரூ 65 ஆயிரம் கோடிதான் ஏழைகளுக்கு ஒதுக்கப்போகிறோம். இது பெரிய தொகை அல்ல. ஊரடங்கை நீட்டிப்பது எளிதானது. ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு சாத்தியமானதல்ல.

மேற்கத்தியநாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானதுதான். ஆதலால், சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்து விடப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்தான் செய்வார்கள், அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளித்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தியாவின்  உற்பத்திக்கும், விநியோகத்திற்கும் சர்வதேசஅளவில் நல்ல சந்தை இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளது.  எனவே நி்ச்சயம் உலகளவிலான ஒப்பந்தங்களை இந்தியாவால் பெறமுடியும் இ்வ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
 

;