புதுதில்லி:
இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்தம், தற்காலிகமான ஒன்றே என்றுதவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்றுரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி, இரண்டாவது காலாண்டில் 4.5 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. நிதியாண்டின் முடிவிலும்,இது 5 சதவிகிதத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் பொருளாதார மந்தநிலைக்கான காரணம் குறித்தும், அதை மீட்பதற்கானசில வழிகளைப் பற்றியும், ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ‘இந்தியாடுடே’ ஏட்டில், கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, என்ன தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் தற்போதைய அரசாங்கத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மையிலிருந்து தொடங்க வேண்டும். மத்திய அமைச்சர்களுக்கு போதுமான அதிகாரம் அளிக்காமல் பிரதமர் அலுவலகத்தில் மட்டும்அதிகாரங்கள் குவிக்கப்படுவது நல்லதல்ல.பிரதமரைச் சுற்றியுள்ளவர்கள் மட்டுமே திட்டமிடுதல், முடிவெடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது, அரசியல் கட்சிகளை நிர்வகிப்பதற்கு உகந்ததாக இருக்கலாமே தவிர, அதன் மூலம் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது. பிரதமர் அலுவலகம் கவனம் செலுத்தினால் மட்டுமே குறிப்பிட்ட அமைச்சகங்கள் முறை யாகச் செயல்படும்.எனவே, மத்திய அமைச்சர்களுக்கு உரியஅதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பொருளாதார மந்தநிலைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படை என்னவெனில், ‘மந்தநிலை காணப்படுகிறது’ என்பதை முதலில் ஏற்றுக்கொள்வதுதான். ஆனால், இந்தப்பிரச்சனை என்பது தற்காலிகமானது என்று நம்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஒருபக்கம் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் மக்களுக்கான தேவை நிறைவடைவது குறைந்து வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.2024-ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. அரசு சொல்வதைப் போல் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டவேண்டுமானால்ஆண்டுக்கு 8 முதல் 9 சதவிகித அளவுக்குவளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லாதது போலவே தெரிகிறது.
கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் ஆழ்ந்தசிக்கலில் இருக்கின்றன. வங்கி அல்லாதநிதி நிறுவனங்களும் சிக்கலில் இருக்கின் றன. இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகிறது. இது அவர்களிடையே ஓர் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உள் நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் இல்லை.முதலீட்டில் தேக்கம் என்பது ஒரு மிகப்பெரியதவறு நடப்பதற்கான அறிகுறி ஆகும்.இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதலைச் சீர்திருத்துதல், தொழிலாளர் சட்டங்கள், நிலையான வரிச்சட்டம் மற்றும்ஒழுங்குமுறை ஆட்சி, சரியான மின்கட்டணம்,தொலைத் தொடர்புத் துறையில் போட்டியைத்தக்கவைத்தல் ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கான தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைப்பதை விட்டுவிட்டு, 100 நாள் வேலை போன்ற திட் டங்கள் மூலம் கிராமப்புற ஏழைகளுக்கு ஆதரவளிக்க அதிக நிதியை அளிக்க வேண்டும்.தேசிய அல்லது மதத் தலைவர்களுக்குப்பிரமாண்டமான சிலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகளின் மனத்தைத்திறக்கும் நவீன பள்ளிகளையும் பல்கலைக் கழகங்களையும் கட்டியெழுப்ப வேண்டும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.