புதுதில்லி:
பணமதிப்பு நீக்கம், கொரோனா ஊரடங்கு போன்றவற்றில், மோடி அரசு நடந்து கொள்வது, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை நினைவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
“பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும்கொரோனா ஊரடங்கு ஆகிய நெருக்கடிகளின் போதும்கூட, மத்திய பாஜக அரசுகிழக்கிந்திய கம்பெனியைப் போல சாமானியர்களை கொள்ளை அடிக்கிறது. சமூகத்தின் பலவீனமான பிரிவினரின் வலியைப்புறக்கணித்து, மக்களின் பாக்கெட்டை விடஅரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதிலேயே கவனம் செலுத்துகிறது” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வர்ஷெர்கில் குற்றம் சாட்டியுள்ளார். “பிபிஇ / டெஸ்ட் கிட்களை வழங்குவதைக் கூட, மோடி அரசால் சரியாக திட்டமிட முடியவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாள்வதில் உணர்ச்சியற்ற அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.ஏழைகளின் வங்கி சேமிப்புக்கான வட்டியைக் குறைப்பது, எரிபொருள் மீதான கலால் உயர்த்துவது என அனைத்திலும், தவறான திட்டமிடல், உணர்ச்சியற்ற அணுகுமுறை மற்றும் பகுத்தறிவற்ற முடிவுகள் ஆகியவையே பாஜக அரசின் செயல்பாடாகஉள்ளது. இது சமூகத்தின் ஏழை மக்களுக்கு வலி, வேதனை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பாஜக அரசு பலஇடங்களில் தோல்வியை சந்தித்து விட்டது”என்றும் ஜெயவீர் ஷெர்கில் விமர்சித்துள்ளார்.