tamilnadu

img

இந்தியப் பொருளாதாரமோ கோமாவில் உள்ளது... தூங்கினால் விழித்தவுடன் எழுந்து நடந்து விடலாம்...

புதுதில்லி:
இந்தியப் பொருளாதாரம் கோமா நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.

கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அரசுக் கடன் பத்திரங்களை, ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வாங்கி வருவது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கி நடத்திய ஆசிய நுண்ணறிவு கருத்தரங்கில் பேசுகையில் இதுதொடர்பாக அவர்மேலும் கூறியிருப்பதாவது:ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பேலன்ஸ் ஷீட்-டை விரிவாக்கம் செய்து வருகிறது. அரசுக் கடன்பத்திரங்களை தொடர்ச்சியாக வாங்கி வருகிறது. அதாவது, நாட்டின் வங்கிகளிடமிருந்து ரிவர்ஸ் ரெப்போ ரேட்டில் தொகையினை வாங்கி அதனை அரசுக்கு கடனாக அளிக்கிறது.நாட்டில் இப்போது பணப்புழக்கம் அதிகம் உள்ளது.ஆனாலும் சோதனையில் இறங்க விரும்பாததால், மக்கள்பணத்தைச் சேமித்து வருகின்றனர். கடனுக்கான தேவைமிகவும் மந்தமாக உள்ளது. வங்கிகள் என்ன செய்கின்றனஎன்றால், தங்கள் பணத்தை ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில்ரிசர்வ் வங்கியில் வைக்கின்றன. ரிசர்வ் வங்கியும் அதனைஎடுத்து தாராளமாக மத்திய அரசுக்கு அளித்து வருகிறது.

நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க அதிகப் பணப் புழக்கம் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. ஆனால்இது நிரந்தரத் தீர்வல்ல. குறைந்த காலத்துக்கே இப்போக்கை நாம் கடைப்பிடிக்க முடியும்.இப்போதைக்கு வங்கிகள் கடன் வழங்குவது குறைந்துள்ளதால் மத்திய வங்கி பணப்பெருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலும், இது ஆர்பிஐ-க்கும் அரசுக்கும் இடையேயான கூட்டுறவுக்கு வழிவகுக்கும். ஆனால் இந்த ஏற்பாடுகள் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும்? வங்கிகள் செயலற்ற கூட்டுறவுக்கு ஒத்துழைக்கும் வரைதான்.பணவீக்கத்தின் அளவைப் பற்றி மக்கள் அஞ்சத் தொடங்கும் போது, ​​பணவீக்கம் மற்றும் குவிக்கப்பட்ட கடனைப் பற்றி அவர்கள் கவலைப்படத் தொடங்கும் போது மற்றும் வங்கிகள் தங்கள் பணத்திற்கான பிற பயன்பாடுகளை எதிர்பார்க்கும்போது, பிரச்சனையாகி விடும்.ஆகவே, நாம் பொருளாதாரத்தை ஒரு தற்காலிக கோமாவில் வைத்திருக்கிறோம். ஆனால், விழித்துக் கொண்டவுடன் அனைவரும் படுக்கையிலிருந்து எழுந்து, முழு வாழ்க்கையை மீண்டும் வாழத் தயாராகி விடுவார்கள் என்று நினைக்கிறோம். அது அதீதமான நம்பிக்கையாகும். அப்படி கருத முடியாது.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.அமெரிக்கா, சீனா ஆகிய வலுவான பொருளாதார நாடுகளுக்கும் சச்சரவுகளை விடுத்து ஒன்று சேருவதற்கு, மற்ற சிறிய ஜனநாயக நாடுகள் முயற்சிக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தற்போதைய பிரச்சனைகளின் போக்கை மாற்றும் என எதிர்பார்க்கலாம் என்றும் ரகுராம்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.