tamilnadu

img

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரி துவக்கம்

நாமக்கல், ஆக.24- நாமக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி சனியன்று துவக்கி வைக்கப்பட்டது. நாமக்கல்லில் புதியதாக சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி கடந்த மாதம் சட்டப் பேர வையில் அறிவித்திருந்தார். இதை யடுத்து நாமக்கல் திருச்சி சாலை,  டான்சி வளாகத்தில் தற்காலிக மாக சட்டக் கல்லூரி அமைக்கப்பட் டுள்ளது. கல்லூரியில் சேருவதற் கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட்  21 ஆம் தேதியன்று தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி யினை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின் சாரத்துறை அமைச்சர் கே.தங்க மணி, சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இந்த விழாவில் சட்டக் கல்வி இயக்குனர் சந்தோஷ் குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  மு.ஆசியா மரியம், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் பங்கேற் றனர். இக்கல்லூரியில் 3 ஆண்டு பட்டப்படிப்புக்கு 80 மாண வர்கள், 5 ஆண்டு பட்டப்படிப்புக்கு 80 மாணவர்கள் என 160 பேருக் கான சேர்க்கை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. சேர்க்கை நடை பெற்ற பிறகு வகுப்புகள் தொடங் கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் 12 மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான சான்றுகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். முன்னதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய தாவது, இந்தியாவில் மகளிருக்கு பாலியல் வழக்குகளை விசாரிக்க  முதன் முதலாக தனி நீதிமன்றம்  தமிழகத்தில் அமைக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டு களில் 440 நீதிமன்றங்கள் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ.1,111 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் 90 சதவிகித நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது.   இன்று  குற்றங்களின் தன்மை மாறி வருவ தாகவும் அதற்கேற்றார் போல் சட்ட படிப்புகள் கற்பிக்கப்படுவதாகவும், இவ்வாண்டு தமிழகத்தில் எந்த  கல்லூரிக்கும் அனுமதி கொடுக் காத நிலையில் 3 சட்ட கல் லூரிக்கு மட்டும் அனுமதி கிடைத் திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் மருத்துவக்கல்லூரி- அமைச்சர்
நாமக்கல்லில் சட்டக்கல்லூரி அமைந்திருப்பது கிராமப்புற ஏழை  மாணவர்களும் சட்டம் பயில வாய்ப்பாக அமையும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டு களில் 4 தாலுகாக்கள் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் மருத்துவ கல்லூரி விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் கே.தங்கமணி தெரிவித்தார்.

;