tamilnadu

வாக்காளர் தகுதி மறுத்து ஜனநாயகப் படுகொலை

நாகர்கோவில், ஏப்.22-கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வும், பறிக்கப்பட்ட வாக்குரிமையை மீட்டுதர வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மூலம்குடியரசு தலைவர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தேர்தல் ஆணையர் ஆகி யோருக்கு மீனவ மக்கள் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை 48 கடலோர கிராமங்களிலும், உள்நாட்டு மீனவர்கள் வசிக்கின்ற 68 கிராமங் களிலும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குரிமைகள் நீக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, கிள்ளியூர், குளச்சல், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றியை நிர்ண யிப்பது மீனவர்களின் வாக்கு வங்கி ஆகும். ஏப்ரல் 18 ஆம் தேதியன்று மீனவர்கள் வாக்கு சாவடிக்கு வாக்களிக்க சென்ற போதுதான் தூத்தூர், இனயம், கடியப்பட்டணம் உள்ளிட்டஒவ்வொரு கிராமத்திலும் ஆயி ரத்துக்கு அதிகமான வாக்குகளும் மற்ற கிராமங்களில் 500, 600, 700 என சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே வாக்குகள் நீக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு வழங்கிய ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஒக்கி புயலில் கடலில் தத்தளித்த 245 குமரிமீனவர்கள் ஆழ்கடலில் பலியாக்கப்பட்டது மீனவ இனப்படு கொலை என கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் களின் வாக்குரிமையை பறித்தது மீனவர்கள் மீதான ஜனநாயக படுகொலை ஆகும். மதவாத கட்சிகளுக்கு எதிராக மீனவர்கள் வாக்களிக்க விரும்பியதை அறிந்தே மீனவர்களின் வாக்குகள் சில அதிகாரிகள் துணையோடு திருடப்பட்டுள்ளன. எனவே வேண்டுமென்றே திருடிய எங்கள் வாக்குரிமையை மீட்டு தரவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.

;