மின்னல் தாக்கி பசு மாடு பலி
சீர்காழி, செப்.19- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாணிக்க வாசல் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவ ரின் மகன் உத்திராபதி(35). இவருக்குச் சொந்தமான பசு மாடு ஒன்று சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள திடல் பகுதியில் இருந்த போது இரவில் இடியுடன் மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ரூ 40 ஆயிரம் மதிப்பிலான பசுமாடு அந்த இடத்திலேயே விழுந்து இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாதானம் கால்நடை மருத்துவர் மணிமொழி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
குடிசை வீடு எரிந்து சாம்பல்
சீர்காழி, செப்.19-நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் பள்ளி கூடத்தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் பழனி(40) விவ சாய கூலித் தொழிலாளி. இவரின் குடிசை வீடு சம்பவத்தன்று தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படை யினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த கொள்ளி டம் காவலர்கள் விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானதாகக் கூறப்படுகிறது. வீட்டு மின் கசிவு காரண மாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பழனியின் குடும்பத்திற்கு சீர்காழி வருவாய்த்துறை சார்பில் வி.ஏ.ஓ விக்டர் வின்னரசு நேரில் சென்று நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி னார்.
புதுக்கோட்டையில் மின் தடை
புதுக்கோட்டை, செப்.19-புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே சாந்தநாதபுரம், புதிய, பழைய பஸ் நிலை யம், சார்லஸ் நகர், கீழராஜ வீதி, நிஜாம் காலனி, மார்த் தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், கலீப்நகர், மருப்பணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், தில கர்திடல், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9.45 முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
மூதாட்டி மயங்கி விழுந்து பலி
கரூர், செப்.19-கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட வேலம்பாடி கிராமம் ரெங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள்(80). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் சசிகுமார். இவர்கள் இருவரது வீட்டின் அருகே உள்ள நடைபாதையை செல்லம்மாள் ஆக்கிரமித்து வந்த தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை சசிகுமார் முறையிட்டும் செல்லம்மாள் ஆக்கிரமிப்பை விலக்கிக் கொள்ளவில்லையாம். இதனால் உயர்நீதிமன்றத்தில் தனது இடத்தை அளவீடு செய்து தருமாறு மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் சசிகுமாரின் வீட்டை அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர் இரு வரும் அந்த பகுதியை அளவீடு செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்லம்மாள் தொடர்ந்து கூச்சலிட்டு உள்ளார். இதனால் மூர்ச்சையான செல்லம்மாள் அங்கே யே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அளவீடு செய்யும் பணியை பாதியிலேயே விட்டு விட்டு அதிகாரி கள் வெளியேறினர். இது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இணையதள சேவை மூலம் விவசாயப் பொருட்கள் விற்பனை
சீர்காழி, செப்.19-நாகை மாவட்டம் ஆலாலசுந்தரம் கிராமத்தில், வட்டார வேளாண் துறை சார்பில் விவசாய பொருட்களின் விற்ப னைக்கு இணைய தளத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் அலுவலர் விவேக் வரவேற்றார். உதவி வேளாண் அலுவலர் சங்கர நாராயணன் பேசுகை யில், விவசாயிகள் பயிரிடுகின்ற எந்த பொருளாக இருந்தா லும் இணைய தள சேவை மூலம் பதிவு செய்து விற்பனை செய்து கொள்ளலாம். விவசாயிகளின் உற்பத்தி பொருள்களான நெல், உளுந்து, பருத்தி, சோளம் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் இணைய தள சேவையில் பதிவு செய்து கொள்வதன் மூலம் தங்களின் விவசாய உற்பத்தி பொருட்களை வாங்க விரும்புகின்ற உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கோ, எளிதில் விற்பனை செய்ய முடியும். இதில் இடைத்தரகர்களின் தலையீடு கிடையாது. வாங்குபவர்களிடமே நேரில் விற்பனை செய்து பயன் பெறலாம் என்றார். வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆத்மா திட்ட உதவி மேலாளர் ரேகா நன்றி கூறினார்.