நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சிபிஐஎம் மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீ.மாரிமுத்து தேர்வு செய் யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன் தலைமையில் நடைபெற்றது. மாநிலசெயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்வீ.மாரிமுத்து மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். நாகை மாவட்ட செயலாளாராக இருந்த நாகைமாலி சட்டமன்ற உறுப்பினர் ஆனதையடுத்து மாவட்டசெயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதியமாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.