tamilnadu

img

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: நான்கு பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தேனி:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில்சிறையிலுள்ள மருத்துவ மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய நான்கு பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 21- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த வழக்கில்தேனி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பத்து பேரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.இந்த வழக்கில் தேனி ஜே.எம். கோர்ட்டில் ஒன்பது பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. வாணியம்பாடியைச் சேர்ந்த முகமதுஷபி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீ கடந்த 16-ஆம் தேதிவிசாரணை நடைபெற்றது. விசாரணையை 19-ஆம் தேதிக்கு (சனிக்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார். இதனிடையே ஏற்கனவே கைதாகி சிறையிலுள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல், அவர்களது தந்தைசரவணன், டேவிஸ் ஆகியோரது மனுக்களும் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அவர்களது சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார், மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஏற்கனவே நீட் தேர்வுஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்உதித்சூர்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதனை மேற்கோள்காட்டி மாணவர்கள் என்பதால் அவர்களது எதிர்காலம் கருதி பிரவீன், ராகுல்ஆகியோருக்காவது ஜாமீன் வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் விடுப்பில் சென்றதால் ஜாமீன் வழக்கு வருகிற 21-ஆம்தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

;