tamilnadu

img

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்க! - கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

கொரடாச்சேரி, ஏப்.2- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பூண்டி.கலைவாணன் ஆகியோரை ஆதரித்து கொரடாச்சேரியில் வெட்டத் துப் பாலத்தில் திங்களன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலபொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன் முன் னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, வை செல்வராஜ், மதிமுக மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளர் ஆரூர்.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றத் தொகுதிபொறுப்பாளர் ப.இனியன், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி ஆகியோர் பேசினர்.நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்தியில் ஆளும் மோடி அரசின் ரெய்டு பயத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணாதிமுக அரசு கடந்த இரண்டரை வருடமாக உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்த துப்பில்லாமல் அயோக்கியத்தனமான ஆட்சி செய்கிறது.அதே போல் காலியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தினால் டெபாசிட் காலியாகும் என்ற பயத்தில் உள்ளாட்சித்தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் தள்ளித் தள்ளிப் போட்டு வந்த அண்ணா திமுக அரசு வேறு வழியின்றி தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 18 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்கிறது.


தேர்தல் தோல்வி பயத்தில் அதிகாரத்தில் உள்ள மமதையில் தற்போது தேர்தல் அறிவித்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் அலுவலகத் தில் வீட்டில் ரெய்டு என்ற பெயரில்சோதனை செய்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை முடக்கலாம் என்ற கனவு பலிக்காது.தமிழகத்தில் நடைபெறுகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் தான் அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார்கள். அதே போல்சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக அரசு 18 தொகுதியிலும் டெபாசிட் இழப்பது உறுதி என்றார்.டெல்டா மக்களாகிய நீங்கள் டெல்டாவை பாதுகாக்க டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பசுமை பகுதியாக அறிவிக்க நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி.கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் நீங்கள் எல்லாம் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், எம்.சேகர், நா.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச்செயலாளர் டி.முருகையன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் கொரடாச்சேரி திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பாலச்சந்தர்(தெற்கு) ஆர்.கலியபெருமாள்(வடக்கு) பேரூர் கழக செயலாளர் பூண்டி.கலையரசன், சிபிஐ. ஒன்றிய செயலாளர் சேசுராஜன் மற்றும் கூட்டணிக் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

;