திருவாரூர் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி சமையல் கூடம் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேர் மதுபோதையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விஜயராஜ், செந்தில், சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.