tamilnadu

திருப்பூர் தொகுதியில் இன்று கே.தங்கவேல் பிரச்சாரம்

.திருப்பூர், ஏப். 12 -திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரச்சாரம் செய்கிறார்.சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஊத்துக்குளி டவுன், 5 மணிக்கு ராக்கியாபாளையம் பிரிவு, 6 மணிக்கு திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர், 7 மணிக்கு மாஸ்கோநகர் பூத்தார், 8 மணிக்கு அனுப்பர்பாளையம் புதூர், 9 மணிக்கு ஏ.செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கே.தங்கவேல் கதிர் அரிவாள் சின்னத்துக்கு ஆதரவு கோரி உரையாற்றுகிறார்.

;