நாகப்பட்டினம், ஏப்.19-நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதில் 76.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நாகை மாவட்டத்தில் வேதாரணியம், கீழ்வேளூர், நாகப்பட்டினம் அகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கியுள்னன. நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி-70.80 சதம், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி-80.65 சதம், வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி- 77.72 சதம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி-78.55 சதம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதி- 76.76 சதம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி-77.17 சதம் ஆகும்.மயிலாடுதுறை நடாளுமன்றத் தொகுதியில் 73.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை-சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகியவை ஆகும் இவற்றுள் முதல் 3 சட்டமன்றத் தொகுதிகள் நாகை மாவட்டத்தில் உள்ளன. எஞ்சிய 3 சட்டமன்றத் தொகுதிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ளன. சீர்காழி சட்டமன்றத் தொகுதி-74.38 சதம், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி-71.17சதம், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி-73.08 சதம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி-70.2 சதம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி- 71.26 சதம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி-71.41 சதம்.