tamilnadu

img

அறிவியல் இயக்க மாநாட்டை முன்னிட்டு பெருமாநல்லூரில் கலை, கலாச்சாரத் திருவிழா

திருப்பூர், ஜூலை 20 - தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற இருப்பதை முன்னிட்டு பெருமாநல்லூரில் கலை மற்றும் கலாச்சார திருவிழா நடத்தப்பட் டது. பெருமாநல்லூர் அம்மன் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்,  தமுஎகச அமைப்பும் இணைந்து  இந்த விழாவை நடத்தினர். சனியன்று நடை பெற்ற இவ்விழாவுக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பா.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் கருணாகரன் வரவேற்றார்.  தமுஎகச கிளைச் செயலாளர் க.சண்முகம் முன்னிலை வகித் தார். சமூக ஆர்வலர் ஓவியர் சுந்தரன் சிறப் புரை ஆற்றினார். இதில் பள்ளி குழந்தை கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிற்பகல் நடைபெற்ற பரிசளிப்பு விழா வுக்கு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் முருகசாமி தலைமை ஏற்க, அறிவியலுக் கான இளைஞர் அமைப்பின் பெருமா நல்லூர் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்  வரவேற்றார். இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சி களில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பெரு மாநல்லூர் கனரா வங்கிக் கிளை மேலா ளர் ரகுநாத், செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சேதுராமன், ஈட்டிவீரம்பாளை யம் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று பரிசளித்துப் பாராட் டினர். ஒருங்கிணைப்பாளர் பா.முத்துசாமி நன்றி கூறினார்.