உதகை, ஏப். 25- பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர்களுக்கு உதகையில் கலை பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் நீலகிரி மாவட்டத்தில் விடுமுறையில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குரலிசை (வாயப்பாட்டு), கீ-போர்டு, பரத நாட்டியம் மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே.21ல்தொடங்கிய இம்முகாம் மே-30 வரை நடைபெற உள்ளது. 5 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் இம்முாகமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. எனினும் சிறுவர் மன்ற சந்தாவாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. நிறைவு நாளன்று பயிற்சி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு நீலகிரி மாவட்ட ஜவஹர் மன்ற திட்ட அலுவலரை 9442147606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விடுத்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.