திருச்சி, மார்ச் 3- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் சார்பில் மாநில அள விலான வலைக்காட்சி தயா ரிப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக் கிழமை திருச்சியில் நடைபெற் றது. முகாமிற்கு தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்த லாலா தலைமை வகித்தார். முகாமின் நோக்கத்தை விளக்கி துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கருணா பேசினார். “செல் போன் வெறுமனே பேசுவதற் கான கருவியல்ல...” என்ற தலைப்பில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் யு.கார்த்திக்கேயன், “நமது கண்களால் உலகைப் பார்க் கும்...” என்ற தலைப்பில் வலைக்காட்சி தயாரிப்பாளர் மைனர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
மாநில துணைப்பொதுச் செயலாளர்கள் க.பிரகதீஸ்வ ரன், களப்பிரன் ஆகியோர் கருத் துரை வழங்கினர். முகாமில் கலந்துகொண்டு “களத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார். முன்னதாக திருச்சி மாவட்டச் செய லாளர் வி.ரெங்கராஜ் வரவேற்க, பொரு ளாளர் பி.காளிராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாநில துணைச்செயலாளர் கி.அன்பரசன் தொகுத்து வழங்கினார். முகாமில் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சியா ளர்ளாக பங்கேற்றனர்.