தேனி:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.2018, 2019 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நாவல்களில் ஒன்றினைத் தேர்வு செய்து, அதற்கான விமர்சனக் கட்டுரையை அனுப்பி போட்டியில் பங்குபெறலாம். கட்டுரைகளை தாளில் எழுதி அஞ்சலிலோ, அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம். கட்டுரைகள் குறைந்தபட்சம் இரண்டு பக்கங்கள் இருக்க வேண்டும். அதிகபட்சம் பக்க எல்லை இல்லை. விமர்சிக்கப்படும் நாவலின் பதிப்புக் குறிப்புகள் கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக ஏழாயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாவதுபரிசாக ரூ.3 ஆயிரம் அளிக்கப்படுகிறது. விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : அக்டோபர் 15 ஆகும்.அஞ்சலில் அனுப்புவோர், அ.புனிதவதி, எ.27, விஸ்வநாதபுரம் முதல் தெரு, துடியலூர், கோவை. 641 034 என்ற முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்புவோர் aramkilai@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம். இத்தகவலை தமுஎகச அறம் கிளை தலைவர் அ. புனிதவதி, செயலாளர் அ.உமர் பாரூக், பொருளாளர் சி.பேரின்பராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.